போற போக்க பார்த்தா.. எல்லார் கையிலும் OnePlus தான் இருக்கும் போல.. பட்ஜெட் விலையில் புதிய Nord சீரிஸ் போன்!
ஒன்பிளஸ் நிறுவனம் புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது. ஒருபக்கம், ஒன்பிளஸ் 12 (OnePlus 12) பற்றிய "பிரமிக்க வைக்கும்" தகவல்கள் வெளியான வண்ணம் இருக்க, மறுபக்கம் ஒன்பிளஸ் 11-ன் லிமிடெட் எடிஷன் (OnePlus 11 Limited Edition) விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கிடையில் ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போன்களுக்கு லேட்டஸ்ட் ஆக்ஸிஜன்ஓஎஸ் அப்டேட்டும் வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 மாடலுக்கும் மே மாதத்திற்கான செக்யூரிட்டி பேட்ச் (Security Patch) உடன் லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் வர தொடங்கி உள்ளது.

இப்படி 'பிஸியான' சூழ்நிலைக்கு மத்தியில். ஒன்பிளஸ் நிறுவனமானது, ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி (OnePlus Nord N30 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். பெரும்பாலும் இது இந்தியாவிற்கு வராது. ஏனென்றால் நோர்ட் என்30 ஸ்மார்ட்போனானது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகிவிட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது.
ஆகவே இது அமெரிக்க சந்தைக்கான ஒன்பிளஸ் மாடலாக இருக்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி-யின் அம்சங்களை பொறுத்தவரை (கீக்பெஞ்ச் வலைத்தளம் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி) இத ஸ்னாப்டிராகன் 695 ஆக்டாகோர் எஸ்ஓசி (Snapdragon 695 Octa-core SoC) மூலம் இயக்கப்படும் மற்றும் 8ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும்.
மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் "மறுபெயரிடப்பட்ட" வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில் இது 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை (Expected Price) நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் என்30 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் இந்திய விலை நிர்ணயம் ரூ.19,999 ஆகும்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: இது பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் உடன் வரும் முதல் ஒன்பிளஸ் போனாபா இருக்கும், மேலும் இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வருமென்றும் கூறப்படுகிறது, அறியாதோர்களுக்கு இந்த சிப் இன்னும் அறிவிக்கப்படவே இல்லை.
மேலும் ஒன்பிளஸ் 12 ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம். அதில் இரண்டு 50 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் பெரிஸ்கோப் லென்ஸுடன் 64 மெகாபிக்சல் கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியையும் பேக் செய்யலாம்,
ஒன்பிளஸ் 12 அறிமுக தேதி மற்றும் விலை: இது 2023 ஆம் ஆண்டின் இறுதியில், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் வருகிற டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். முதலில் இது சீனாவில் தான் அறிமுகமாகும்; உலகளாவிய வெளியீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது பெரும்பாலும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமான ரூ.56,999 உடன் ஒற்றுப்போகலாம். எப்படி பார்த்தாலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.60,000 க்குள் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒன்பிளஸ் 12 க்கு முன்பாக ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஒடிஸி எடிசன் (Oneplus 11 5G Marble Odyssey Edition) அறிமுகமாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








