Home
Mobile

பெர்லின் விழாவில் முன்னனி நிறுவனங்களின் படைப்புகள்!!!

By Prabakaran

தொழில்நுட்ப உலகமே எதிர்நோக்கும் 2013ன் IFA பெர்லின் விழாவை பற்றி முன்பு கூறியிருந்தோம். இன்னும் இரு தினங்களில் நடக்க இருக்கும் இந்த தொழிலநுட்ப கண்காட்சியில் பல முன்னனி நிறுவனங்களின் படைப்புகள் இடம்பெற உள்ளன.

முன்னனி மொபைல் நிறவனங்களான சாம்சங், சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் தங்களது புதிய படைப்புகளை உலகிற்க்கு அறிமுக படுத்த உள்ளனர். லினோவா, ஆல்காடெல், ஹூவாய் போன்ற நிறுவனங்களும் தங்ளது படைப்புகளை வெளியிட உள்ளனர்.

சோனி நிறுவனம் 20.7 மெகாபிக்சல் கேமரா கொண்ட எக்ஸ்பீரியா Z1 மற்றும் எக்ஸ்பீரியா டேப்லெட் ஆகியவைகளை வெளியிடும் என தெரிகிறது. இதன் ஹனோமி ஐ1 மினி பற்றி எந்த தகவலும் இல்லை. சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி நோட் 3யை வெளியிட உள்ளது.

மேலும் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சும் வெளிவர இருக்கிறது. ஏஸர் நிறுவனம் 6இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே கொண்ட டேப்லெட்டை வெளியிட உள்ளது. இந்த விழாவில் அறிமுகம் ஆக இருக்கும் சில சாதனங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

3 இன்ஞ் டிஸ்பிளே கொண்ட சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்சில் 512எம்பி ராம், டியுல் கோர் பிராசஸர், ஆன்டிராய்ட் ஜெல்லிபீன் ஓஎஸ் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் கால், மெசேஜ், இன்டர்நெட் போன்ற வசதிகள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3, 5.7இன்ஞ் ஆமோலெட் டிஸ்பிளே மற்றும் குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் கொண்டுள்ளது. 3ஜிபி ராம் கொண்ட உலகத்தின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக தான் இருக்கும்.

சோனி எக்ஸபீரியா Z1

சோனி எக்ஸபீரியா Z1


சோனி எக்ஸபீரியா Z1 மற்றும் ஹனோமி ஐ1 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 20.7 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. சோனி நிறுவனத்தின் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராவாக இது விளங்கும்.

ஹச்டிசி ஒன் மேக்ஸ்

ஹச்டிசி ஒன் மேக்ஸ்

ஹச்டிசி நிறுவனம் தனது 6இன்ஞ் பேப்லெட் மாடல் ஸ்மார்ட்போனான ஹச்டிசி ஒன் மேக்ஸை பெர்லின் விழாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் உள்ளது.

 பேனாசோனிக்

பேனாசோனிக்


பேனாசோனிக் நிறுவனம் 20 இன்ஞ் டேப்லெட் பற்றி இந்த ஆண்டு கூறியது. விண்டோஸ் ஓஸ் உடன் வரும் இந்த டேப்லெட் பெர்லின் விழாவில் வெளியிட படுமா என்ற தகவல் எதவும் இல்லை.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X