Home
Mobile

ஐ.எஃப்.ஏ 2019 : முரட்டுத்தனமான ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நிறுவனங்கள்.!

ஐ.எஃப்.ஏ 2019 (ifa 2019) ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சியில் உலகின் முன்னணி தொழில்நுட்ப பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்ச்சி 6நாட்கள் நடைபெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

எல்ஜி, சோனி மற்றும் நோக்கியா

இந்த நிகழ்வு 06 - 11 செப்டம்பர் 2019 முதல் மெஸ்ஸி பெர்லின் கண்காட்சி மைதானத்தில் நடைபெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. பின்பு எல்ஜி, சோனி மற்றும் நோக்கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களின்
அட்டகாசமான சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பட்ஜெட்விலையில் தலைசிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹுவாய் மேட் 30 சிரீஸ்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் நிறுவனம் தனது ஹுவாய் 30 மற்றும் ஹுவாய் 30 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சாதனங்கள் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பம், அட்டகாசமான
கேமராக்கள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 990சிப்செட் வழங்கப்படும என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு இப்போது வந்த கேலக்ஸி நோட் 10-சாதனத்தில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஹுவாய் மேட் 30 சிரீஸ் சாதனத்திலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க்

எல்ஜி நிறுவனம் இந்த ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்வில் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் அடிப்படையாககொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு திரை அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்ஜி வி60 திங்க்

ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்வில் எல்ஜி வி60 திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அல்லது 855 பிளஸ் சிப்செட் உடன் 5ஜி ஆதரவு கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 2:

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனி நிறுவனம் இந்த ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்வில் தனது சோனி எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் 6.1-இன்ச் டிஸ்பிளே, 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 8.2:

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 8.2 ஸ்மார்ட்போனை இந்த ஐ.எஃப்.ஏ 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
IFA 2019: Top 5 Smartphones To Launch At Europe’s Mega Technology Show: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X