செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

By Jeevan
|

செல்போன்களின் எண்ணிக்கை, செல்போன் வாங்குவோரின் எண்ணிக்கை மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதோ அதேபோலத்தான் செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சில போன்கள் திருடப்படுகின்றன. சிலவை நாமாக தொலைத்துவிடுகின்றோம். அப்படி செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பதையே இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

இனி இன்டர்நெட் வழியாகவே 'தொட்டு தொட்டு' ரொமான்ஸ் செய்யலாம்...

சாதாரண செல்போன் காணாமல் போனால் கூட அதிக கவலை இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படுகின்ற அதிநவீன, விலையுயர்ந்த செல்போன் காணாமல்போனால் என்ன செய்ய? ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவறுகிறார்கள். தகவல்கள் கீழே!

சூப்பர் ஸ்டார் ரஜினி...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை ஏற்ப்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.

பின் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல கடவுச்சொற்கள் முறையானது உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனை மற்றொருவர் பயன்படுத்துவதற்கெதிராக செயல்படும்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

மொபைல் டிராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விபரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்குமாறும் அமைக்கலாம்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனுக்கான இன்ஷூரன்ஸ் விலை நூற்று சொச்ச ரூபாய்கள் தான். போலீஸில் புகார் கொடுத்ததற்கான சான்றோடு, மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விபரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ, தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

மொபைல் காணாமல் போனது உறுதியானதும் நீங்கள் சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை முடக்குங்கள்.

பின்னர் அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பின்னர், 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை. மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான்.

இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு கோரலாம்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட்போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம்.

ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

செல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...

நீங்கள் பயன்படுத்தும் செல்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்து, உங்கள் போனில் அதிநவீன வசதிகள் இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பயன்படுத்தியும் பாதுகாக்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X