சிறப்பு சலுகைகளுடன் புதிய ஐடியா ஸ்மார்ட்போன்!

3.2 டபிள்யூவிஜிஏ தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இந்த கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.
இதன் 150 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட 512 எம்பி ரேம் மற்றும் இதன் மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.
இந்த ஐடி-918 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதோடு மட்டுமல்லாமல் இது டியூவல் சிம் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.
இதனால் இரண்டு சிம் கார்டுகளை எளிதாக ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு இந்த ஸ்மார்ட்போனில் ரூ.2,340 மதிப்புள்ள நிறைய இலவச சலுகைகளையும் பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போனுக்கு முன்பு ஐடியா நிறுவனம் பிளேடு மற்றும் ஐடி-280 என்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது.
ஐடியா நிறுவனம் வெளியிட்ட ஐடி-280 ஸ்மார்ட்போன் ரூ. 5,850 விலை கொண்டது. இப்போது வெளியிட்டிருக்கும் இந்த ஐடி-918 ஸ்மார்ட்போன் ரூ. 5,994 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications