ஆரவாரத்துடன் வரும் புதிய ஐடியா மொபைல்!

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் ஆன்ட்ராய்டு ஒஎஸ் இயங்க 528 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் துணை கொண்டு வந்துள்ளது இந்த புதிய மொபைல். இந்த மொபைல் 2.8 இஞ்ச் திரையை கொண்டதால், 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கும்.
இதன் கேமராவினை பற்றி கவலையே இல்லை. 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த துல்லியத்தை கொடுக்க முடியும். ஐடி-280 மொபைல் சிறந்த இன்டர்னல் மெமரி மற்றும் எக்ஸ்டர்னல் மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 32ஜிபி வரை மெமரி வசதியை வழங்கும்.
யூஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 1,200 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளதால், பேட்டரி பற்றிய கவலையில்லை. மல்டிமீடியா வசதியினையும் உபயோகித்து மகிழ முடியும். சோஷியல் நெட்வொர்கிங் வசதியினையும் பெறலாம். நிறைய புதிய அப்ளிக்கேஷன்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐடியா நிறுவனத்தின் மூலம் வெளியாக இருக்கும் இந்த மொபைலின் மூலமாக சிறந்த வசதியினையும், அரிய தொழில் நுட்பத்தினையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். கூடிய விரைவில் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைல் ரூ.5,800 விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
