சலுகையுடன் சொந்த பிராண்டில் ஐடியா வழங்கும் புதிய மொபைல்கள்!

ஐடியா ப்ளேடு என்ற பெயர் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனையும், ஐடி-280 என்ற பெயரில் மற்றொரு ஸ்மாட்ர்போனையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இசட்இடி நிறுவனம் விற்பனை செய்து வரும் பிளேடு மொபைலை தனது பிராண்டில் பெயர் மாற்றம் செய்து ஐடியா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இதேபோன்று, ஹுவெய் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐடியோஸ் எக்ஸ்-1 என்ற மொபைலை தனது பிராண்டில் ஐடி-280 என்ற பெயரில் கொடுத்துள்ளது ஐடியா நிறுவனம்.
ஐடியா பிளேடு ஸ்மார்ட் மொபைல் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் இயங்கும். இந்த மொபைல் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டுள்ளது.
இதனால் ஐடியா பிளேடு மொபைலில் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம். எந்த காட்சியையும் சிரமம் இன்றி முழுமையாக காணலாம். இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் விதவிதமான புகைப்படங்களையும்,சுவாரஸ்யமான வீடியோவினையும் எடுக்க முடியும்.
இதில் உள்ள எக்ஸ்டர்னல் மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு 32 ஜிபி வரை சப்போர்ட் செய்கிறது. 150 எம்பி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் எளிதாக பெறலாம்.
இன்றளவில் வாடிக்கையாளர்கள் மொபைலில் அன்றாட பயன்படுத்த கூடிய நிறைய இன்டர்நெட் வசதியினை எதிர் பார்க்கின்றனர். இது போன்ற வசதிகளை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐடியா பிளேடு மொபைலில் எந்த விதமான ஏமாற்றமும் இல்லை.
இந்த ஐடியா பிளேடு மொபைலில் ஓப்ரா மினி பிரவுசர், ஆர்குட், டிவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் சர்ச், யூடியூப், ஜி-மெயில் போன்ற வசதிகளை பெற்று பயனடையலாம். ஐடியா ப்ளேடு மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3ஜி வசதியினை பெற முடியும்.
இந்த 3ஜி வசதியினை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.259 மதிப்புள்ள ஸ்பெஷல் பேக் திட்டத்தில் வாங்கினால் ரூ.3,500 மதிப்புள்ள தகவல் பரிமாற்ற சேவை(டேட்டா சர்வீஸ்) இலவசமாக பெறலாம். பிரவுசிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவைகள் இந்த மொபைலில் சாத்தியம் ஆகும். இந்த அரிய வாய்ப்பு ஐடியா பிளேடு மொபைலில் மட்டும்.
ஐடி-280 மொபைலை ரூ.5,850 விலையிலும், ஐடியா ப்ளேடு மொபைலை ரூ.7,990 விலையிலும் பெறலாம்.


Click it and Unblock the Notifications
