Home
Mobile

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் புதிதாக ஐசிஎஸ் அப்டேஷன்!

By Super

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் புதிதாக ஐசிஎஸ் அப்டேஷன்!
சாம்சங் நிறுவனத்தின் மொபைல்போன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு காரணமாக இருந்தது கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். இதில் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில், அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கும் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்க உள்ளது சாம்சங் நிறுவனம்.

இந்த ஐசிஎஸ் அப்டேஷனை கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஆஸ்ட்ரேலியா, இத்தாலி, நியூஸிலாந்து, ஐரோப்பா போன்று இன்னும் பல நாடுகளில் இந்த அப்டஷனை வழங்க இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங்.

4.3 இஞ்ச் அகன்ற திரை, தகவல்களை தெளிவாக வழங்க சூப்பர் அமோல்டு ப்ளஸ் திரை தொழில் நுட்ப வசதி, ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் என்று அனைத்திலும் அருமையான தொழில் நுட்ப வசதிகளை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

இதன் கேமரா வசதியும் அதிகம் தான். 8 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை எளிதாக வழங்கும் இதன் கேமரா லெட் ஃபிளாஷ் தொழில் நுட்பத்தினையும் கொண்டது. 3டி டச்விஸ் போன்ற தொழில் நுட்பத்திற்கு சிறப்பான வகையில் சப்போர்ட் செய்ய இதில் 1,650 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது.

ஸ்மார்ட் வசதிகளை கியூட்டாக வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், இன்னும் டபிள் ஸ்மார்ட்டாக ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் தொழில் நுட்பத்தினையும் வழங்கும் என்பது சாம்சங் கேலக்ஸி வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும் விஷயம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X