Home
Mobile

ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனில் புதிய மீசூ ஸ்மார்ட்போன்கள்!

By Super

ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனில் புதிய மீசூ ஸ்மார்ட்போன்கள்!
ஆன்ட்ராய்டு அப்டேஷனை அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளது மீசூ நிறுவனம். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை அனைத்து ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். மீசூ நிறுவனமும் தனது எம்எக்ஸ் மற்றும் எம்-9 என்ற ஸ்மார்ட்போன்களில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போன்களின் புதிய வடிவமைப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும். 4 இஞ்ச் திரை வசதி கொண்ட எம்எக்ஸ் ஸ்மார்ட்போன், 1,400 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களின் அதி வேக செயல்பாட்டினை பார்க்க முடியும்.

எம்-9 ஸ்மார்ட்போனின் திரை, எம்எக்ஸ் ஸ்மார்ட்போனின் திரையை காட்டிலும் சற்று குறைந்த இஞ்ச் கொண்டது. எம்-9 ஸ்மார்ட்போன் 3.6 இஞ்ச் திரையையும், 1,000 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் வழங்கும்.

139 கிராம் எடை கொண்ட எம்எக்ஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும். 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா என்றால் இதன் துல்லியத்தினை கேட்கவே வேண்டாம்.

எம்-9 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும். இதில் உள்ள சிறப்பான மற்றும் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் இதில் 1,600 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

ஏற்கனவே சிறந்த தொழில் நுட்பங்கள கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், இந்த புதிய அப்டேஷனின் மூலம் இன்னும் சிறந்த தொழில் நுட்ப வசதிகளையும் கொடுக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X