புது அப்டேஷனை வழங்கும் எக்ஸ்பீரியா எஸ்!

எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷனை வழங்க முடிவும் செய்துள்ளது சோனி நிறுவனம். எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும்.
இத்தகைய திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனை பொருத்த அளவில் பிராசஸர் தறமானதா என்ற கவலையும தேவையில்லை.
இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்ததில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம் 8206 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. முகம் பார்த்து பேசும் வசதியை கொடுக்கும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம்.
இதில் உள்ள மற்ற உயர்ந்த தொழில் நுட்பம் பற்றி கேட்டால் நிச்சயம் இந்த ஸ்மார்ட்போனை இப்போதே வாங்கலாம் என்று தான் தோன்றும். என்எப்சி தொழில் நுட்பத்தினையும் எளிதாக பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் பெரிதும் உதவும்.
நிறைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் இனி ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதள அப்டேஷனையும் பெற்றுவிட்டால், ஏராளமான வசதிகளையும் இந்த எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் பெறும். இந்த எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் ரூ.32,549 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications