சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷன் தாமதமாகிறது!

Posted By: Staff
சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷன் தாமதமாகிறது!
வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுவதால் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வழங்கப்படுகிறது. சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனிலும் ஐசிஎஸ் அப்டேஷன் கொடுக்கப்போவதாக பேச்சிக்கள் எழுந்தன. ஆனால் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் வழங்க இருந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதி, ஏதோ சில காரணத்தால் தாமதமாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்தியாகத்தான் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது ஆன்ட்ராய்டு 2.3.5 ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸரும் இதில் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 5.3 இஞ்ச் திரை வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 800 X 1280 பிக்ஸல் திரை

துல்லியமும் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் இன்னுமொரு மிக பெரிய சிறப்பு என்னவென்றால் இதில் 2,500 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளதால் இதில் 13 மணி நேரம் டாக் டைம் மற்றும் 820 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் எதனால் இந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வழங்கும் வசதி தாமதமாகிறது என்ற சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனில் அப்டேஷன் வழங்கும் தேதியும் இன்னும் சரியாக வெளியாகவில்லை. ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனுக்காக காத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் கூடிய விரைவில் அப்டேஷன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot