மலிவு விலையில் ஜொலிக்கும் ஐபால் மொபைல்!

Posted By: Staff
மலிவு விலையில் ஜொலிக்கும் ஐபால் மொபைல்!
வடிவமைப்பிலேயே பிரம்மாண்டம் கொடுத்து நிறைய மொபைல்களை உருவாக்குகின்றது ஐபால் நிறுவனம். அந்த முறையை தனது புதிய மொபைலில் புகுத்தி இருக்கிறது ஐபால். எலிகன்ஸ் என்ற பட்ஜெட் மொபைலை அறிமுகம் செய்து இருக்கிறது ஐபால் நிறுவனம்.

இந்த மொபைலின் தொழில் நுட்பம் மூலம் அனைத்து வேலைகளையும் வாடிக்கையாளர்கள் எளிதாக முடிக்கலாம். வேலைகளை மட்டும் தான் இந்த மொபைல் எளிதாக முடிக்கும் என்று அல்ல, பார்பபவர்களின் கண்களையும் எளிதாக கவர்ந்து விடுகிறது.

இந்த பட்ஜெட் மொபைல் 2.6 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டதாக இருக்கிறது. அதிகபட்சம் இரண்டாயிரம் மொபைல் நம்பர்களை பதிவு சய்து கொள்ள உதவும் இந்த எலிகன்ஸ் மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இந்த ஐபால் எலிகன்ஸ் மொபைல் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்டது. ஜிஎஸ்எம் 900/1800 மெகாஹெர்ட்ஸ் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

கூடுதல் ஏ2டிபி புளூடூத் வசதியையும் இந்த ஐபால் எலிகன்ஸ் மொபைல் அளிக்கிறது. சர்வ சாதாரணமாக இன்டர்நெட் வசதியினை பெற இதில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் உள்ளது. இதனால் சுலபமாக பிரவுசிங் செய்யலாம்.

இதன் 1,300 எம்ஏஎச் பேட்டரி 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 280 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கும். இந்த டாக் டைம் தொடர்ந்து பேசுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு போதுமான நேரமாக இருக்கும்.

பொழுதுபோக்குக்காக எப்எம் ரேடியோ வசதியும் இருக்கிறது. ஒரு மொபைலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த ஐபால் எலிகன்ஸ் மொபைலில் தரும். அதுவும் இந்த புதிய மொபைல்  ரூ.2,500 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot