கரீனா கபூர் அறிமுகம் செய்யும் புதிய ஐபால் ஸ்மார்ட்போன்கள்!

சிறந்த தொழில் நுட்ப சாதனங்களை வழங்கும் ஐபால் நிறுவனம், ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இப்போதெல்லாம் மின்னனு சாதன நிறுவனங்கள், புதிய தொழில் நுட்ப வசதிகளை வழங்க பிரபல நடிகர், நடிகைகளை பிராண்டு அம்பேஸ்டராக தேர்வு செய்கின்றனர். ஐபால் நிறுவனம் நிறைய ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்க இருப்பதால், இதற்கு பாலிவுட் நடிகை கரீனா கபூரை பிராண்டு அம்பேஸ்டராக அறிவிக்க இருக்கிறது.
ஏற்கனவே ஐபால் ஸ்லைடர் டேப்லட்டிற்கு பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபால் நிறுவனம் வழங்க இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களில், உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா, 3ஜி, ஜிபிஎஸ் போன்ற வசதிகளை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில், ஆன்ட்ராய்டு மார்கெட்டில் உள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தலாம்.
அதிலும் நிறைய ஃப்ரீ அப்ளிக்கேஷன்களையும் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியீடு மற்றும் இதன் விலை விவரம் போன்ற தகவல்களை விரைவில் பெறலாம்.


Click it and Unblock the Notifications