பிரி ஆர்டரில் எல்ஜி நெக்சுஸ் 4 போன்

Posted By: Karthikeyan
பிரி ஆர்டரில் எல்ஜி நெக்சுஸ் 4 போன்

கூகுளின் புதிய போனான எல்ஜி நெக்சுஸ் 4 போனை வாங்க தற்போது இபே.இன் என்ற ஆன்லைன் கடையில் விண்ணப்பிக்கலாம். 8ஜிபி கொண்ட நெக்சுஸ் 4 போனை வாங்க ரூ.23,490 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் 16ஜிபி போனை வாங்க ரூ.27,490 செலுத்த வேண்டும்.

மேலும் இபே இந்த புதிய போன்களை வாங்க பல எளிதான வழிமுறைகளையும் அறிவித்திருக்கிறது. அதாவது இந்த போன்களை வாங்க பைசாபே, கிரடிட் கார்டு, இஎம்ஐ, டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் வங்கி பண பரிமாற்றம் போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தலாம்.

மேலும் இந்த போன்களை வாங்க பிரி ஆர்டர் செய்தால் டிசம்பர் 10 முதல் இந்த போன்கள் விண்ணப்பித்தவர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று இபே அறிவித்திருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. இந்த நெக்சுஸ் போனை எல்ஜியின் கூட்டணியில் கூகுள் களம் இறக்குகிறது. இந்த போனில் குவாட் கோர் ப்ராசஸர், 4.7 இன்ச் கிரிஸ்ப் டிஸ்ப்ளே, வயர்லஸ் சார்ஜிங் வசதி போன்றவையும் உள்ளன.

இந்த போன் ஆன்ட்ராய்டு 4.2 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் சூப்பரான கேமராக்களையும் இந்த போன் கொண்டிருக்கிறது. கூகுள் அப்ளிகேசன்களை இந்த போனில் மிக எளிதாக இயக்க முடியும்.

இந்த போன் எப்போது இந்தியாவில் விற்பனனக்கு வரும் என்று தெரியவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்