புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஐபால்!

By Super
|

புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஐபால்!
புதிய டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது ஐபால் நிறுவனம். ஆன்டி 3-இ மற்றும் ஆன்டி 4-டி என்ற பெயர் கொண்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த எதிர்பார்ப்பு? என்று கேட்க தோன்றுவது இயல்பு தான். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் பிரத்தியேக வசதி என்ன என்பதையும் பார்க்கலாம்.

ஐபால் ஆன்டி 3-இ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்குதளத்தினையும், ஆன்டி 4-டி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும். அதிலும் ஐபால் ஆன்டி 3-இ ஸ்மார்ட்போனையும்விட, ஆன்டி 4-டி ஸ்மார்ட்போன் பெரிய திரையினை கொண்டதாக இருக்கும்.

ஆன்டி 4-டி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதியினையும், கொண்டது. மேலும் இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிரசஸரையும் கொண்டது.

ஆன்டி 4-டி ஸ்மார்ட்போனின் திரையினைவிட சற்று சிறியதாக 3.2 இஞ்ச் திரையினை ஆன்டி 3-இ ஸ்மார்ட்போன் கொண்டிருந்தாலும், தகவல்கள்

மற்றும் புகைப்படம் எதுவானாலும் தெளிவாக வழங்கும். ஆன்டி 3-இ ஸ்மார்ட்போன் 650 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸரினை கொடுக்கும்.

ஆன்டி 4-டி ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்ப வசதியினை வழங்குவதோடு 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், முகப்பு கேமராவினையும் கொண்டது. டியூவல் சிம் வசதியினை கொண்ட இந்த ஆன்டி 3-இ ஸ்மார்ட்போன் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

முக்கியமாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலையினையும் பார்க்கலாம். ஐபால் ஆன்டி 3-இ ஸ்மார்ட்போன் ரூ. 6,990 விலையையும், ஆன்டி 4-டி ஸ்மார்ட்போன் ரூ. 9,490 விலையையும் கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X