பட்ஜெட் விலை ஃபேப்லட்கள் பற்றி சிறப்பான ஒப்பீடு!

Posted By: Staff
பட்ஜெட் விலை ஃபேப்லட்கள் பற்றி சிறப்பான ஒப்பீடு!
ஸ்மார்ட்போன் மோகமே இன்னும் வாடிக்கையாளர்களுக்கு குறையவி்ல்லை. அதற்குள் ஃபேப்லட் மோகமும் ஆரம்பமாகிவிட்டது. இதனால் இரண்டு சிறந்த ஃபேப்லட்டின் ஒப்பீட்டை பார்க்கலாம். அதுவும் இங்கு கூறப்படும் ஒப்பீடு இரண்டு குறைந்த விலை கொண்ட ஃபேப்லட்டின் ஒப்பீடு.

ஐபால் ஏன்டி 5-சி மற்றும் கோபியன் மெர்குரி மேஜிக் ஆகிய இந்த குறைந்த விலை கொண்டிருக்கும் ஃபேப்லட்களின் தொழில் நுட்ப வசதிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த இரண்டு ஃபேப்லட்களுமே சிறப்பான தொடுதிரை வசதியினை அளிக்கும் 5 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த ஃபேப்லட்களின் திரை அளவு அதிகமானதாக இருப்பினும் இந்த திரையின் துல்லியம் கொஞ்சம் குறைவாக தெரிகிறது. ஐபால் ஏன்டி-சி மற்றும் கோபியன் மெர்குரி மேஜிக் ஃபேப்லட்களின் திரை 800 X 480 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும்.

சில தொழில் நுட்ப வசதிகள் இந்த 2 ஃபேப்லட்டிற்கும் ஒத்து போகிறது என்று தான் கூற வேண்டும். ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும். சிறப்பான ப்ளாட்ஃபார்ம் மட்டும் இருந்தால் போதாது. இதற்கு ஒத்துழைக்கும் சிறப்பான வசதியினை வழங்கும் பிராசஸர் இருக்க வேண்டும்.

ஐபால் ஏன்டி 5-டி ஃபேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ-9 பிராசஸர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. கோபியன் மெர்கரி மேஜிக் ஃபேப்லட் அதே 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும ஏஆர்எம்வி-7 பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும்.

கேமராவை பொருத்த மட்டிலும் கோபியன் மெர்குரி மேஜிக், ஐபால் ஏன்டி 5-சி ஃபேப்லட்டினை மிஞ்சி நிற்கிறது. ஏன்டி 5-சி 5 மெகா பிக்ஸல் கேமராவையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் கொண்டதாக இருக்கிறது. மெர்குரி மேஜிக் 12 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும்.

இந்த இரண்டு ஃபேப்லட்களும் 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதி மட்டும் அல்லாது இந்த மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும். ப்ளூடூத், வைபை, 3ஜி ஆகிய தொழில் நுட்ப வசதிகளுக்கு எளிதாக சப்போர்ட் செய்யும் இந்த ஃபேப்லட்களின் பேட்டரி வசதியினையும் பார்க்கலாம்.

ஐபால் ஏன்டி 5-சி ஃபேப்லட் 2,300 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினை கொண்டது. ஆனால் இதன் மூலம் எவ்வளவு டாக் டைம் வசதியினை பெற முடியும் என்பது இன்னும் சரிவர வெளியாகவில்லை.

மெர்குரி மேஜிக் ஃபேப்லட்டில் இருக்கும் 2,200 பேட்டரி 15 நாட்கள் ஸ்டான்-பை டைமினையும் 13 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் கொடுக்கும்.

ஐபால் ஏன்டி 5-சி ஃபேப்லட் ரூ. 12,999 விலை கொண்டதாகவும், மெர்குரி மேஜிக் ரூ. 12,700 விலை கொண்டதாகவும் இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்