ஐபால் மற்றும் மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு

Posted By: Staff

ஐபால் மற்றும் மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீடு

ஐபால் ஏன்டி 4.3ஜே மற்றும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீட்டினையும் இங்கே பார்க்கலாம். மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஸ்மார்ட்போனின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஐபால் ஏன்டி 4.3ஜே ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவானதாக இருக்கும்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டு இயங்கும். ஐபால் ஏன்டி 4.3ஜே ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டதாக இருக்கும். ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷன் வழங்குவது பற்றி வேறெந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக பெற முடியும். இதனால் வீடியோ ரெக்கார்டிங், வீடியோ கால் வசதி ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தலாம். இன்னொரு பக்கம் ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மெமரி வசதியில் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கும். இதில் 2ஜிபி இன்டர்னல் மெமரி வசதி மற்றும் 32 ஜிபி வரை எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியினை பயன்படுத்தலாம். 3ஜி நெட்வொர்க் வசதி வேண்டும் என்ற பெரும்பாலானவர்களின் ஆசை இந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் நிறைவேறிவிடும். இந்த ஸ்மார்ட்போன்கள் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்வதோடு, வைபை வசதியினையும் வழங்கும்.

ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போன் 1,630 எம்ஏஎச் மற்றும் 900 எம்ஏஎச் என்று டியூவல் பேட்டரி வசிதயினை கொடுக்கும். மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஸ்மார்ட்போன், 2,000 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் 5 மணி நேரம் டாக் டைம், 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும்.

ஐபால் ஏன்டி 4.3-ஜே ஸ்மார்ட்போன் ரூ. 9,499 விலையினையும், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-100 ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையினையும் கொண்டாதக இருக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot