ஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.!

By Sharath
|

ஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.!

ஜபால் ஆஷான் 4 என்கிற புதிய ஃபோனை அறிமுகம் செய்துள்ளது ஆஷான் நிறுவனம். ஐபால் ஆஷான் 4 மொபைல் பிரத்தியேகமாக மூத்த குடிமக்களை நோக்கி சந்தையில் களமிறங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மொபைல் போன் 2.31 இன்ச் டிஸ்பிலேயுடன் 1800 எம்எஎச் பேட்டரியுடன் 1,000 தொடர்புகளைச் சேமிக்கும் சேமிப்புடன் ரூ.3,499 வந்துள்ளது. ஜியோ போன் இல் இருக்கும் 4ஜி சேவை இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய கீபேட், சிறந்த ஆடியோ, பெரிய திரை எழுத்துக்கள், அவசர எச்சரிக்கை ஆதரவு மற்றும் மொபைல் ட்ராக்கிங்குடன் ஜபால் ஆஷான் 4 வருகிறது.

இந்த ஜபால் ஆஷான் 4 இல் பேசும் கீபேட் உள்ளது, இது ஆங்கிலத்தில் நம்பர்களைக் கூறும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜபால் ஆஷான் 4 போன் 1800 எம்எஎச் பேட்டரியுடன் 32ஜிபி மைக்ரோ எஸ்டி சேமிப்புடன் 200 குறுஞ்செய்திகள் மற்றும் 1000 தொடர்புகளைச் சேமிக்கும் சேமிப்புடன் வந்துள்ளது.

"SOS" பட்டன் அழுத்தினாள் உங்கள் அவசர நேரத்தில் அபாய சைரன் ஒலிக்கும் விதம் வடிவைக்கப்பட்டுள்ளதாம். இத்துடன் கூடுதல் சேவையாக ஒன் டச் போன் லாக், எல்இடி விளக்கு, எப்எம் எளியச் செயலி பயன்பாட்டுடன் மூத்த குடிமக்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.

ஜபால் ஆஷான் 4 போன் வெள்ளை நிறத்தில் அனைத்து இந்திய சில்லறை கடைகள் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iBall Aasaan 4 Feature Phone With 1800mAh Battery Launched at Rs 3,499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X