கால் ஆஃப் டூட்டி விளையாடினேன்: ஒன்பிளஸ் 11ஆர் தனித்துவமான அனுபவத்தை வழங்கியது.!

ஒரு மணிநேரம் கால் ஆஃப் டூட்டி
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களையும் விரிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, இந்த போனில் கேமிங் அனுபவம் எப்படி உள்ளது எனது பரிசோதிக்கத் தொடங்கினேன். அதாவது மற்ற போன்களை விட தனித்துவமான கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த புதிய போன். குறிப்பாக ஒரு மணிநேரம் கால் ஆஃப் டூட்டி கேம் விளையாடினால் இந்த போனின் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் இந்த புதிய போன் குவால்காம் மென்பொருள் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக மற்ற ஆண்ட்ராய்டு
போன்களை விட ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் ஆனது தனித்துவமான வசதிகளை வழங்குகிறது. அதேபோல் இந்த போனின் புத்திசாலித்தனமான அல்காரிதங்கள் மூலம் ஆப்ஸை மேம்படுத்த முடிகிறது. பின்பு நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் போனை குளிர்ச்சியாக வைக்க தனித்துவமான மென்பொருள் வசதிகள் இதில் உள்ளன. வேகமாக இந்த போனை இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த போனின் முழு செயல்திறன் வசதியை அறிந்து கொள்ளத் தரமான கேமிங் ஆப்ஸ்களை இதில் பதிவிறக்கம் செய்து சோதனை செய்தோம். அதில் அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் இதில் தடையின்றி பயன்படுத்த முடிகிறது. அதேபோல் சிறந்த வேகம் கொடுக்கிறது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக ஹார்ட்கோர் மொபைல் கேம்களை விளையாடுவதில் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்
கேமிங் வசதிக்கு தகுந்தபடி ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த போனில் கேமிங் விளையாடும் போது, துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல், ஆயுதங்கள் பயன்படுத்தும் போதும் ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இதன் டிஸ்பிளே துல்லியமான காட்சிகளை அப்படியே வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் டச் ரெஸ்பான்ஸ் மற்றும் ஃப்ரேம்ரேட் போன்றவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நன்கு ட்யூன் செய்யப்பட்ட கேமிங் பிசியில் 360 நோ-ஸ்கோப்பிங்கைப் போல இந்த ஒன்பிளஸ் போனும் கிராஃபிக் தீவிர கேம்ப்ளே நிலைமைகளைப் பராமரிக்கிறது. அதாவது கேமிங் பிசி வழங்கும் அனைத்து அம்சங்களையும் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் வழங்குகிறது.
குறிப்பாக இந்த போனில் கேம் விளையாடும் போது சறுக்குவதும், குதிப்பதும், குறிவைப்பதும், சுடுவதும் எளிதாக இருந்தது. ஒன்பிளஸ் நிறுவனம் இதுபோன்ற புதுமையான கேமிங் அம்சங்களைக் கொடுப்பதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதில் உள்ள இண்டஸ்ட்ரி-லீடங் கூலிங் மற்றும் மென்மையான ஏஎப் ஆனது சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். அதாவது மென்மையான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். பின்பு இதில் உள்ள எச்டிஆர் ஆதரவு கேமிங் விளையாடும் போதும் அதிகமாக உதவுகிறது என்றே கூறலாம். அதிக பிரேம் ரேட்கள் மற்றும் எச்டிஆர் ஆதரவு தரமான கேமிங் அனுபவத்தை வழங்கும்.
வியக்கவைக்கும் செயல்திறன்
மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட சிறந்த செயல்திறன் வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் போன். அதாவது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் குவால்காம்-மேட் சிப்செட் மற்றம் ஜிபியு பவர் ஆகியவற்றில் 30 சதவீதம் வேகம் வழங்குகிறது. குறிப்பாக இது உயர் வரையறை கேமிங் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹைப்பர்பூஸ்ட் கேமிங் எஞ்சினுடன் வருகிறது. இது ஒரு பொது செயல்திறன் அடாப்டர் 4.0 (GPA4.0) உடன் கேமிங்கின் போது பிரேம் விகிதங்களில் ஏற்படும் எரிச்சலூட்டும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கிறது. அதிக பிரேம் விகிதங்களைக் காட்டிலும், சிறந்த ஃபிரேம்-பேஸிங் என்பது பிளேயர் துல்லியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை எந்த ஹார்ட்கோர் கேமருக்கும் தெரியும். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் தான் கேமிங் பயனர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த போனில் கேம் விளையாடும் போது துல்லியமான ஸ்க்ரோலிங் மற்றும் மென்மையான டச் ஆகியவை சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் மற்ற ஆண்ட்ராய்டு போன்களில் இதுபோன்ற அம்சங்களைக் கிடைப்பது மிகவும் கடினம். குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு எக்கச்சக்க அம்சங்களை வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் போன்.
500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதியுடன் கூடிய ரேஸர் ஷார்ப்பான 6.7-இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ் வரை வழங்குகிறது. குறிப்பா இந்த போன் ஹைப்பர் டச் இன்ஜின் தான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக டிஸ்ப்ளே லேயர் மற்றும் இயக்க முறைமை மற்றும் கேமின் தொடர்புடைய அம்சங்களின் அடிப்படையில் ஆழமான தேர்வுமுறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனில் புதிய அல்காரிதத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலை நம்பி வாங்கலாம்.
முன்பு கூறியபடி இந்த புதிய ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் ரெஃப்ரெஷ் ரேட் கேமிங் பயனர்களுக்கு ஒரு தரமான அனுபவத்தை வழங்கும். குறிப்பாக ரெஃப்ரெஷ் ரேட் அம்சத்தில் மற்ற நிறுவனங்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 3டி கூலிங் சிஸ்டம்
பொதுவாக போனில் நீண்ட நேரம் கேம் விளையாடினால் போன் சூடாகும். ஆனால் இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது கூட சூடாகவில்லை. அதாவது இந்த போன் குளிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த போனின் பெஸ்போக் குளிரூட்டும் அமைப்பு கிராஃபைட்டின் நீராவி அறையின் விரைவான வெப்ப-பரிமாற்றத் திறனுடன் SoC இலிருந்து வெப்பத்தைத் திறமையாக வெளியேற்றுகிறது.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது வெப்பத்தைச் சேமிக்க உப்புக்குப் பதிலாக பாரஃபின் மெழுகுகளைப் பயன்படுத்துகிறது. இது குளிரூட்டும் அமைப்பின் வெப்ப வெகுஜனத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், SoC ஐ நீண்ட நேரம் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆனால் குளிரூட்டும் முறை வெப்பத்தைச் சேமித்து மெதுவாக அகற்ற அனுமதிக்கிறது. குறிப்பாக இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தான் போனை நீண்ட வருடங்கள் பயன்படுத்த உதவுகிறது. மேலும் இந்த புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
புத்திசாலித்தனமான குளிரூட்டும் அமைப்பு நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் போனை பாதுகாக்க உதவுகிறது. அனைத்து வித கேம் ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த போனின்செயல்திறன் போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
முக்கியமான அம்சங்கள்
இந்த போனில் கேம் விளையாடும் போது இடையே வரும் மெசஜ்கள், வாட்ஸ்அப் செய்திகள் போன்றவற்றை எளிதாகப் பார்க்க முடிகிறது. மேலும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போனின் டிஸ்பிளே, வடிவமைப்பு, செயல்திறன், கேமரா வசதி போன்றவை பயனர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். குறிப்பாக பிரீமியம் போனில் இருக்கும் அனைத்து முக்கிய அம்சங்களும் இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனில் நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். ஒரு நேரத்தில் 44 ஆப்ஸ்களை செயலில் வைத்திருக்கிறது இந்த ஒன்பிளஸ் போன். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது என்பதுதான் உண்மை.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் ஒரு மணி நேரம் கேம் விளையாடிய பின்பு பேட்டரி சார்ஜில் 10 சதவீதத்தை மட்டுமே இழந்தது. அதேபோல் இந்த போனின் பேட்டரி அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய நிலைமை இருக்காது. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பாஸ்ட் சார்ஜிங் வசதியில் அதிக கவனம் செலுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
நம்பி வாங்கலாம்
கேமிங் பயனர்களுக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டு இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய போனுக்கு தொடர்ந்து பல அப்டேட்கள் கூட கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
இந்த ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.44,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








