டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.. வெறும் ரூ.11,999 க்கு இப்படி ஒரு ப்ரோ லெவல் Smartphone-ஆ?

|

விலையை கேட்டதுமே "டக்குனு ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்!" என்று நினைக்கும் அளவிற்கு ரெட்மி (Redmi) நிறுவனத்தின் "லேட்டஸ்ட்" ப்ரோ லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது புதிய ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது!

அதென்ன Smartphone? அதன் ஒரிஜனல் விலை என்ன? ஆபருக்கு பின் அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

எந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது ஆபர் கிடைக்கிறது?

எந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது ஆபர் கிடைக்கிறது?

நாம் இங்கே பேசுவது - ரெட்மி நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான்!

பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி, குவாட் ரியர் கேமரா செட்டப், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், சிறந்த ஸ்டோரேஜ் மற்றும் ரேம், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

ஒரிஜினல் விலை VS ஆபர் விலை!

ஒரிஜினல் விலை VS ஆபர் விலை!

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 என்கிற MRP விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது வெறும் ரூ.11,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.6000 என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கிறது!

ரூ.11,999 என்கிற விலைக்கு ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறவர்கள். உடனே சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com ஐ அணுகலாம்.

ரூ.11,999 க்கு இது வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா?

ரூ.11,999 க்கு இது வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா?

ரூ.12,000 என்கிற தொகையை செலவு செய்து வாங்கும் அளவிற்கு - ரெட்மி நோட் 9 ப்ரோ ஆனது வொர்த் ஆன ஸ்மார்ட்போன் தானா?

இந்த கேள்விக்கான பதிலை ஆராய்வதற்கு முன், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பின்னரே ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்!

வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

குறை சொல்லமுடியாத டிஸ்பிளே!

குறை சொல்லமுடியாத டிஸ்பிளே!

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ப்ரோ ஆனது 6.67 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை, 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவின் கீழ் வழங்குகிறது.

போதாக்குறைக்கு, இது பெசல்லெஸ் பஞ்ச்-ஹோல் டிஸைனையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் v5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஆக மொத்தம், டிஸ்பிளேவில் பெரிதாக எந்த குறையும் சொல்லிவிட முடியாது!

டீசன்ட் ஆன கேமராக்கள்!

டீசன்ட் ஆன கேமராக்கள்!

கேமராக்களை பற்றி பேசுகையில், ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது CMOS இமேஜ் சென்சாரை கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது.

அதில் 48MP மெயின் (ISOCELL பிளஸ் + f/1.79 + 10x ஜூம்) கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா (f/2.2) + 5MP மேக்ரோ கேமரா (f/2.4 ) + 2MP டெப்த் கேமரா (f/2.4) உள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்பீ ஷூட்டர் உள்ளது.

இது பெரும்பாலான போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி தேவைகளை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னதுஇந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது

பெர்ஃபார்மென்ஸ், பேட்டரி எல்லாம் எப்படி?

பெர்ஃபார்மென்ஸ், பேட்டரி எல்லாம் எப்படி?

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் Qualcomm Snapdragon 720G சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 5020mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஆக பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனிற்கு 10-க்கு 8 மார்க் கொடுக்கலாம்; பேட்டரிக்கு தாராளமாக 10 க்கு 9 மார்க் கொடுக்கலாம்!

Best Mobiles in India

English summary
Hurry Up Redmi Note 9 Pro Smartphone now available for just Rs 11499 Is worth to buy in this 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X