ஓடியாங்க, ஓடியாங்க.. 5G போன்களை இதைவிட கம்மி விலையில் கிடைக்காது: ஆபர் போட்ட Amazon .!

|

அமேசான் தளத்தில் fab phones fest எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்பட்ட 5ஜி போன்களை இப்போது கம்மி விலையில் வாங்க முடியும்.

தள்ளுபடி

அதாவது 5G போன்களுக்கும் அமேசான் தளத்தில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தள்ளுபடி விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 5ஜி போன்களுக்கு அறிவிக்கப்பட்ட தள்ளுபடியைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போன் ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த போன் தற்போது ரூ.17,999-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

Dimensity 810 5G சிப்செட்,50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்.

இனி வீடே தியேட்டர் தான்! பாதி விலையில் 55 இன்ச் Smart TV வாங்கலாம்.. சோனி, சாம்சங், எல்ஜி என எல்லாமே!இனி வீடே தியேட்டர் தான்! பாதி விலையில் 55 இன்ச் Smart TV வாங்கலாம்.. சோனி, சாம்சங், எல்ஜி என எல்லாமே!

  ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த போன் தற்போது ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நல்லவரா? கெட்டவரா? இனி எல்லோருக்கும் 420! மஸ்க் வழங்கும் இன்பதிர்ச்சிக்கு ரெடியா இருங்க..நல்லவரா? கெட்டவரா? இனி எல்லோருக்கும் 420! மஸ்க் வழங்கும் இன்பதிர்ச்சிக்கு ரெடியா இருங்க..

iQOO Z6 5G ஸ்மார்ட்போன்

iQOO Z6 5G ஸ்மார்ட்போன்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 5G போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

iQOO Z6 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே இது கிடைக்கிறது! WhatsApp-ஐ திறங்க.. ஸ்க்ரீனின் இடதுபுறம் பாருங்க!

ரியல்மி narzo 30 5G

ரியல்மி narzo 30 5G

முன்பு ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்பட்ட ரியல்மி narzo 30 5G ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, 16எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஏர்டெல் நிறுவனமே பொறாமைப்படும் Jio-வின் இந்த திட்டங்களைப் பற்றித் தெரியுமா? அதிக நன்மைகள்.!ஏர்டெல் நிறுவனமே பொறாமைப்படும் Jio-வின் இந்த திட்டங்களைப் பற்றித் தெரியுமா? அதிக நன்மைகள்.!

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ16,999-விலையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி குவாட் ரியர் கேமரா, 6.6-இன்ச் டிஸ்பிளே, எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 40 மொபைல்கள் திருட்டு! மொத்தமும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. நடந்தது என்ன?ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 40 மொபைல்கள் திருட்டு! மொத்தமும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. நடந்தது என்ன?

 விவோ வி21இ 5ஜி

விவோ வி21இ 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 22,550-ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,099-விலையில் வாங்க முடியும். அதாவது 19 சதவீதம் இந்த போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.44-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமராஎனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Hurry up! Amazon offers 46 percent discount on latest 5G smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X