Home
Mobile

அடிச்சு நொறுக்கும் Amazon.. சாம்சங், ஒன்பிளஸ் முதல் ரெட்மி, ரியல்மி வரை.. பல 5G Phone-கள் மீது ஸ்பெஷல் ஆஃபர்!

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்களில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் 5ஜி சேவைகள் (5G Services) கிடைக்க தொடங்கி விட்டன. இதன் மூலம் 4ஜி போன்களை பயன்படுத்துபவர்களின் கவனம் 5ஜி போன்களின் பக்கம் திரும்பி உள்ளது.

இதன் விளைவாக இந்திய சந்தையில்.. ஒருபக்கம் தொடர்ச்சியான முறையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன; மறுபக்கம் ஏற்கனவே வெளியான 5ஜி போன்களின் மீது திடீர் விலைக்குறைப்புகள், நம்ப முடியாத சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அடிச்சு நொறுக்கும் Amazon.. பல 5G Phone-கள் மீது ஸ்பெஷல் ஆஃபர்!

அதனொரு பகுதியாக பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளமானது அமேசான் 5ஜி ரெவல்யூஷன் சேல் (Amazon 5G Revolution Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த விற்பனை 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும்.

ஏற்கனவே ஆரம்பித்து விட்ட அமேசான் 5ஜி ரெவல்யூஷன் சேல் ஆனது ஜூன் 25, 2023 வரை நடக்கவுள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பல்வேறு பிராண்டுகளின் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில் சில பெஸ்ட் டீல்களின் (Best Deals) விவரங்கள் இதோ:

சாம்சங் 5ஜி போன்கள் (Samsung 5G Phones) மீதான சிறந்த சலுகைகள்: கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி ஆனது ரூ.1,06,999 க்கு கிடைக்கிறது; கேலக்ஸி ஏ54 5ஜி ஆனது ரூ.33,499 க்கு வாங்க கிடைக்கிறது; கடைசியாக கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 5ஜி ஆனது ரூ.76,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ 5ஜி போன்கள் (iQOO 5G Phones) மீதான சிறந்த சலுகைகள்: ஐக்யூ நியோ 6 5ஜி ஆனது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது; ஐக்யூ இஸட்7எஸ் 5ஜி ஆனது ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது; ஐக்யூ நியோ 7 5ஜி ஆனது ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது; கடைசியாக ஐக்யூ 11 5ஜி ஆனது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது

ஒன்பிளஸ் 5ஜி போன்கள் (OnePlus 5G Phones) மீதான சிறந்த சலுகைகள்: ஒன்பிளஸ் 11 5ஜி ஆனது ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது; ஒன்பில்ஸ் 11ஆர் 5ஜி ஆனது ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது; கடைசியாக ஒன்பிளஸ் 10டி 5ஜி ஆனது ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஷாவ்மீ மற்றும் ரியல்மி 5ஜி போன்கள் (Xiaomi and Realme 5G Phones) மீதான சிறந்த சலுகைகள்: ஷாவ்மீ 12 ப்ரோ 5ஜி ஆனது ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது; ரெட்மி நோட் 12 5ஜி ஆனது ரூ. 14,999 க்கு வாங்க கிடைக்கிறது; ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஆனது ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது.

டெக்னோ 5ஜி போன்கள் (TECHNO 5G Phones) மீதான சிறந்த சலுகைகள்: டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி ஆனது ரூ.10,249 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக, சமீபத்தில் அறிமுகமான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 5ஜி (Tecno Phantom V Fold 5G) ஆனது ரூ.79,638 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huge Offer Discount on Latest 5G Mobile Phones Check Best Deals of Amazon 5G Revolution Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X