ஆப்பிள் பிரியர்களுக்கு இந்த "ஐபோன் 8 சர்ப்ரைஸ்" போதும்.!

Written By:

இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகப்போகும் ஐபோன் 8 ஆனது இடை நில்லாமல் வெளியாகிக்கொண்டிருக்கும் லீக்ஸ் செய்திகளில் மூழ்கி திளைக்கிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 8 வெளியீட்டில் பெரிய ஆச்சரியங்களை நமக்கு வழங்குமென்பதை மேலும் உறுதிப்படுத்தும் தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்பிள் பிரியர்களுக்கு இந்த

இதிலிருந்து ஆப்பிள் அதன் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டதை அறிய முடிகிறது. சரி ஆப்பிள் ஐபோன் 8-ல் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போர்ட்ரியட் லைட்டிங்

போர்ட்ரியட் லைட்டிங்

முதல் சிறப்பம்சமாக, எடுக்கும் புகைப்படத்தின் பின்னணியை மங்களாகும் போர்ட்ரியட் மோட் புகைப்படங்கள் எனப்படும் போர்ட்ரியட் லைட்டிங் இக்கருவியில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெறும் என்பது உறுதி.

போக்கே விளைவு

போக்கே விளைவு

இது தவிர்த்து ஐபோன் 8 ஆனது இயந்திர கற்றல் சாதகத்தை கையாண்டு புகைப்படங்களில் போக்கே விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் கோன்டர் லைட் (Contour Light) நேச்சுரல் லைட் (Natural Light), ஸ்டேஜ் லைட் (Stage Light), ஸ்டேஜ் லைட் மோனோ (Stage Light Mono) மற்றும் ஸ்டூடியோ லைட் (Studio Light) ஆகியவைகளை ஆதரிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டச் ஐடிக்கு டாட்டா சொல்லும் பேஸ் ஐடி

டச் ஐடிக்கு டாட்டா சொல்லும் பேஸ் ஐடி

ஐபோன் 8-ல் பேஸ் ஐடி இடம்பெறுவதும் கிட்டதட்ட உறுதி தான். ஏனெனில் ஐபோன் 8-ல் டச் ஐடி உருவாக்கும் வாய்ப்பு குறைவுதான் ஆக மாற்றாக ஆப்பிள் நிறுவனம் பேஸ் ஐடியை பொருத்தலாம். பேஸ் ஐடி செயல்முறையானது டச் ஐடி போன்றே தான் இருக்கும். இருப்பினும்அது உங்கள் முகத்தின் எல்லா கோணங்களையும் கைப்பற்றிய பிறகு டச் ஐடியை விட சிறப்பாக செயல்படும்.

அனிமோஜிக்கு தயாராகுங்கள்

அனிமோஜிக்கு தயாராகுங்கள்

ஐபோன் 8-ல் ஆப்பிள் நிறுவனத்தின் எமோஜீக்கள், அனிமோஜீக்களாக மாறலாம். ஆமாம், அனிமேட்டட் எமோஜிக்கள் அறிமுகமாகலாம்.

முகபாவங்களைப் பிரதிபலிக்கும்

முகபாவங்களைப் பிரதிபலிக்கும்

ஐபோன் 8-ன் 3டி பேஸ் சென்சார் திறன்களைப் பயன்படுத்தி உங்கள் முகபாவத்தை வெளிப்படுத்தும் இமோஜிக்களை, அதாவது புன்னகை, புருவத்தை உயர்த்துதல் போன்ற உங்கள் முகபாவங்களைப் பிரதிபலிக்கும் இமோஜிக்களை உருவாக்கும் அம்சம் இடம்பெறலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huge iPhone 8 leaks detail Face ID, Portrait Mode 2.0 and Animoji. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot