விரைவில்: அசத்தலான ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன்.!
ஹுவாய் நிறுவனம் வரும் விரைவில் ஹுவாய் y9 பிரைம் (2019) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.'

அசத்தலான டிஸ்பிளே:
ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.59-இன்ச் டிஸ்பிளே வடிவடிமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம்; மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் y9 பிரைம் (2019) சேமிப்பு:
ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால்
பயன்படுத்த அருமையாக இருக்கும்.

அட்டகசமான ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வைட்-ஆங்கிள் கேமரா, டெப்த் சென்சார் என்ற வகையான கேமராக்கள் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம்-ஸ்னாப்டிராகன் :
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் கிரிண் 710எப் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் வேகமாக செயல்படும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இந்த ஸ்மாரட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications