ரூ.3000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹுவாய் ஸ்மார்ட்போன்.!
இந்த ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஹுவாய் நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஹுவாய் வ்யை9 (2019) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹூவாய் வ்யை 9 டிஸ்பிளே :
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோ-கோர் கிரின்710
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரின்710 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.1இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் பிளாக், ப்ளூ, மற்றும் தங்க நிற விருப்பங்களில் வருகிறது இந்த வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல்.

மெமரி நீட்டிப்பு ஆதரவு
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

டூயல் ரியர் கேமரா
இந்த ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் 16 எம்பி+2எம்பி டூயல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications