நான்கு கேமரா & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஹூவாய் வ்யை 9.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹூவாய் நிறுவனம் அமைதியாக நான்கு கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ஹூவாய் வ்யை 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் நிற வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை, இருந்தபோதிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம்
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் வ்யை 9 :
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 659 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் பிளாக், ப்ளூ, மற்றும் தங்க நிற விருப்பங்களில் வருகிறது இந்த வ்யை 9 ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்: நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் 16 எம்பி+2எம்பி டூயல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


4000எம்ஏஎச்:
ஹூவாய் வ்யை 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








