அசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹூவாய் தனது புதிய ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் மாடலை மலேசியா உட்பட பல ஆசிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விலை (இந்திய மதிப்பில்) ரூ.14,165-ஆக உள்ளது. மேலும் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் க்ரின் 710ஏ ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் Huawei's AppGallery கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கூகுள் ஆப்ஸ் மற்றும் சேவைகளுடன் இந்த சாதனம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் Y7a ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக side-facing கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் Midnight Black, Crushed Green மற்றும் Blush Gold நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

ஹூவாய் Y7a ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.1, பிஎல்இ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், ஏஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன். மேலும் 206 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications