6.26-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 அறிமுகம்.!
ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.11,990-ஆக உள்ளது.
ஹுவாய் நிறுவனம் தற்சமயம் புதிய ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 450:
ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் பேஸ் அன்லாக் மற்றும்
கைரNனை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி+2எம்பி
டூயல் ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை:
ஹுவாய் வ்யை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.11,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications