அறிமுகம் : 12எம்பி கேம், 3ஜிபி ரேம், 4000எம்ஏஎச் பேட்டரியுடன் ஒய்7 ப்ரைம்.!
இந்த புதிய ஸ்மார்ட்போன் அடிப்படையில் சீனாவில் கிடைக்கும் என்ஜாய் 7 பிளஸ் மாடலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களில் ஹூவாய் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் பல சந்தைகளில் அதன் பல புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து இந்த சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மேலுமொரு கருவியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஹூவாய் ஒய்7 ப்ரைம் என்றவொரு ஸ்மார்ட்போனை இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் ஹாங்காங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய ஸ்மார்ட்போன் அடிப்படையில் சீனாவில் கிடைக்கும் என்ஜாய் 7 பிளஸ் மாடலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் விமால் தலத்தில் ரூ.15.456/- என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கிறது. தவிர, இதன் முக்கிய அம்சமாக அதன் ஒரு உயர் பேட்டரி திகழ்கிறது. மேலும் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை இங்கே காண்போம்.

டிஸ்பிளே
அறிமுகமாயுள்ள ஹூவாய் ஒய்7 ப்ரைம் ஸ்மார்ட்போன் ஆனது 1290 பிக்சல்கள் X 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 அங்குல தொடுதிரை டிஸ்பிளேவுடன் வருகிறது.

ரேம்
ஹூவாய் ஒய்7 ப்ரைம் ஆனது 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அது 3ஜிபி ரேம் கொண்டு வருகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள் சேமிப்பும் கொண்டுள்ளது.

கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் ஒளியியல் துறையை பொறுத்தவரை, ஹூவாய் ஒய்7 ப்ரைம் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.

பேட்டரி
ஹூவாய் ஒய் 7 ப்ரைம் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு பாரிய 4000எம்ஏஎச் திறன்கொண்ட நீக்கமுடியாத பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இணைப்பு விருப்பங்கள்
ஹூவாய் ஒய்7 ப்ரைம் ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் + சிடிஎம்ஏ) ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூஎஸ்பி ஓடிஜி, எப்எம், 3ஜி மற்றும் 4ஜி ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. உடன் ப்ராக்சிமிட்டி சென்சார், அக்கசேலரோமீட்டர், மற்றும் ஆம்பியண்ட் லைட் சென்சார் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications