அறிமுகம் : டூயல் கேமராவுடன் ஹூவாய் Y7 பிரைம் (2018).!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்சமயம் அந்நிறுவனம் ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நல்ல சிப்செட் வசதி மற்றும் டூயல் கேமரா போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம்இ வெள்ளி மற்றும் சாம்பல் போன்ற வண்ணங்களில் ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) மாடல் கிடைக்கும். மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் 155கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) ஸ்மார்ட்போன்.

ஹூவாய் வ்யை7 பிரைம்(2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications