புதிய ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ஹவாய் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.13,750-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் மாடல்.

பிளாக், கோல்டன் மற்றும் சில்வர் போன்ற நிறங்களில் ஹவாய் வைய்6 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
ஹவாய் வைய்6 ப்ரோ(2017) பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3020எம்ஏஎச்:
ஹவாய் வைய்6 ப்ரோ(2017) ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications