Home
Mobile

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் ஹூவாய் வ்யை6 (2018) அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பாத்த ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹூவாய் நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஹூவாய் வ்யை6 (2018):

ஹூவாய் வ்யை6 (2018):

ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 1080பிக்சல்தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் விவோ வி9 ஸ்மார்ட்போன்
மாடலுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450:

ஸ்னாப்டிராகன் 450:

ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாகஇருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட சென்சார் வசதிகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்மாடல் வெளிவந்துள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்எடைப் பொறுத்தவரை 150 கிராம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஹூவாய் வ்யை6 (2018) ஸ்மார்ட்போன் மாடல் 200 டாலர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பலதகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Y6 2018 Officially Launched With Snapdragon 450 SoC and Android Oreo; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X