ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் களமிறங்கும் ஹூவாய் வ்யை5 லைட்.!
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 சிபியு, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் ஹூவாய் வ்யை5 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த ஹூவாய் தயாராகிக் கொண்டிருக்கிறது. மேலும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ஹூவாய் வ்யை5 லைட் ஸ்மார்ட்போன் மாடல்.

ஹூவாய் வ்யை5 லைட் ஸ்மார்ட்போனின் மாடல் எண் சிஏஜி-எல்03 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடல்.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 சிபியு, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை சிம் கார்டு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருவி 854 x 480 பிக்சல் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே.
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மற்றும் எல்இடி பிளாஷ் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் பிரபலமான கோ பயன்பாடுகளை இவற்றில் எளிமையாக பெற முடியும்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
ஹூவாய் வ்யை5 லைட் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications