5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹூவாய் வ்யை3(2018) ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்,
மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை, தங்கம் மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 854 ஒ 480பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் எம்டி6737எம் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த வ்யை3(2018) ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல்
எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கூகுள் செயலிகளை இந்த ஸ்மார்ட்போனில் எளிமையாக பயன்படுத்த முடியும்.
ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போனில் 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications