Home
Mobile

மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் ஹூவாய் பி20.!

இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் அடிப்படையில் ஹூவாய் புதிய பி-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 24எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Prakash

ஹூவாய் நிறுவனத்தின் பி-சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளியாகி வருகிறது, அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் அவற்றில் அட்டகாசமான மூன்று ரியர் கேமரா லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஹூவாய் பி20 ஸ்மார்ட்போன் மாடல்.

 24எம்பி செல்பீ கேமரா:

24எம்பி செல்பீ கேமரா:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின் அடிப்படையில் ஹூவாய் புதிய பி-சீரிஸ் ஸ்மார்ட்போனில் 24எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை இயக்கும் கிரின் 970 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூ டெப்த் கேமரா:

ட்ரூ டெப்த் கேமரா:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் ட்ரூ டெப்த் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போனினை விட மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

ஹூவாய் பி20 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Huawei to unveil P20 with triple lens rear camera setup in March ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X