Home
Mobile

iPhone 16-க்கு வெடி வச்ச சீன நிறுவனம்.. மறுநாளே உலகின் முதல் Tri-Fold Smartphone அறிமுகம்.. Huawei அதிரடி!

Huawei Tri-Fold Smartphone Launch Date: ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் விஷயத்தில் "நீங்கலாம் கான்செப்ட்லயே இருங்க.. நான் மார்க்கெட்டுக்கு போறேன்!" என்று மற்ற நிறுவனங்களை பார்த்து கூறும்படியாக ஹூவாய் நிறுவனமானது - மிகவும் எதிர்பார்த்தபடியே - உலகின் முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஹுவாயின் இந்த ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் சரியாக எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதெப்படி ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களுக்கு சிக்கலாக அமையலாம்? இதோ விவரங்கள்:

ஹூவாய் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுமாகும்? ஹூவாய் நிறுவனம் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று, சீனாவில் ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளது. அந்நிகழ்வின் போது என்னென்ன புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்கிற பட்டியலை ஹூவாய் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் நீண்ட காலமாக அறிமுகத்திற்காக காத்திருக்கும் ஹுவாயின் (மற்றும் உலகத்தின்) முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 16-க்கு வெடி வச்ச சீன நிறுவனம்.. Huawei அதிரடி!

ஏனென்றால் செப்டம்பர் 10 நடக்கும் நிகழ்வு குறித்த போஸ்டரில், ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் நிழற்படத்தை பார்க்க முடிகிறது. ஆக இந்நிகழ்வில் ஹூவாய் தனது ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று ஊகிக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. அதாவது ஆப்பிள் நிறுவனம் அதன் இட்ஸ் க்ளோடைம் வெளியீட்டு நிகழ்வை (ஐபோன் 16 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வை) நடத்தும் மறுநாளே ஹூவாய் அதன் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது.

இதெப்படி ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரீஸ் மாடல்களுக்கு சிக்கலாக அமையலாம்? செப்.10 அறிமுகமாகும் ஹுவாயின் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது வெறுமனே ஒரு கான்செப்ட் அல்ல. அதாவது சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தப்பட்ட டெக்னோ ஃபாண்டம் அல்டிமேட் 2 (Tecno Phantom Ultimate 2) காமற்றும் ஒப்போவின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டுமே வெறும் கான்செப்ட்கள் ஆகும். அதாவது பொது மக்களிடத்தில் விற்பனைக்கு வராது.

ஆனால் ஹூவாயின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அப்படி அல்ல. இது வெகுஜன சந்தைக்கு வருகிறது. இது நிச்சயம் "விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இதன் மூலம் ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சீரிஸில் உள்ள ப்ரோ மாடல்களின் விற்பனை பாதிக்கப்படலாம். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஹூவாய் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது $2,800 முதல் $4,900 வரைக்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.2,35,000 முதல் ரூ.4,11,000 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இது சீன விலை நிர்ணயம் ஆகும், மற்ற சந்தைகளில், பிராந்தியத்தைப் பொறுத்து விலைகள் இன்னும் அதிகமாகலாம். இன்னும் சொல்லப்போனால் இது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம்.

ஹூவாயின் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 10 இன்ச் இன்னர் டிஸ்பிளேவுடன் டேப்லெட் போன்ற கட்டமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு இன்வார்ட் ஸ்க்ரீன்களை கொண்டிருக்கும் மற்றும் டூயல்-ஹிஞ் அமைப்பு வழியாக இணைக்கப்பட்ட அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

இது கிரின் 9 சீரிஸ் சிப்செட்டில் இயங்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஒரு வட்ட வடிவிலான கேமரா யூனிட் மற்றும் ஸ்லிம் டிசைனை பெறலாம். சுவாரசியமாக இதில் பல வகையான ஏஐ திறன்கள் மற்றும் ஏஐ அம்சங்கள் சேர்க்கப்படலாம். தனது முதல் ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனை தவிர்த்து, இந்நிகழ்வின் போது ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஹார்மனிஓஎஸ் ஸ்மார்ட் டிரைவிங் தயாரிப்புகளை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு செப்டம்பர் 10 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும். இதே நிகழ்வில் ஹார்மோனிஓஎஸ் ஸ்மார்ட் டிரைவிங் தயாரிப்புகளான லக்ஸீட் ஆர்7 மற்றும் புதிய ஸ்மார்ட் கார் மாடல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டு நாளின் போது, சரியான விலை நிர்ணயம் மற்றும் விரிவான அம்சங்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Tri Fold Smartphone to Launch on Sep 10 Just After iPhone 16 Launch on Sep 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X