இந்த மாதம் ஹுவெய் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Super
|

இந்த மாதம் ஹுவெய் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
சிறந்த எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுக்கும் நிறுவனமான ஹுவெய் புதிதாக 2 ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் அறிமுகம் செய்கிறது.

அசன்டு ஒய்-200 மற்றும் அசன்டு ஜி-300 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்த மாதம் வெளியிடுகிறது ஹுவெய் நிறுவனம்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். அசன்டு வரிசை ஸ்மார்ட்போனான ஒய்-200 மற்றும் ஜி-300 ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே கியூவல்காம் எம்எஸ்எம்7225ஏ ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போனில் 800 மெகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரும், அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது.

அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போனின் 3.15 மெகா பிக்ஸல் கேமரா, 2048 X 1536 பிக்ஸல் கேமரா துல்லியத்தினையும் கொடுக்கும். இதனால் அழகான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினை எளிதாக பெற முடியும்.

அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போனில் அசத்தலான புகைப்படத்தினை கொடுக்க 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் நமது நாட்டில் ஹுவெய் நிறுவனம், இந்த மாதம் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலையையும் பார்க்கலாம்.

ஹுவெய் அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போன் ரூ. 9,490 விலையையும், அசன்டு ஜி-300 ஸ்மார்ட்போன் ரூ. 14,990 விலையையும் கொண்டதாகவும் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X