தீபாவளி கொண்டாட்டத்தை துவங்கும் ஹுவெய்!

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் அசன்டு வரிசை ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குவதாக இருக்கும். அதிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும்.
அசன்டு ஜி-330, அசன்டு ஜி-600 மற்றும் ஒய்-201 ப்ரோ என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள், தீபாவளிக்கு அறிமுகமாக உள்ளது. ஆனால் இதில் ஏதேனும் சிறப்பு தலுகைகள் வழங்கப்படுமா? என்பது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.
அசன்டு ஜி-330 ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும், 5 மெகா பிக்ஸல் கேமராவினை மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டதாகவும் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.
அசன்டு ஜி-600 ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். அசன்டு ஜி-330 ஸ்மார்ட்போனுக்கு ஒப்பிட்டு பார்க்கையில், அசன்டு ஜி-600 ஸ்மார்ட்போனின் திரை மற்றும் கேமரா வசதிகள் அதிகம் என்று கூறலாம். இதில் முகப்பு கேமராவும், 8 மெகா பிக்ஸல் கேமராவும் சேர்த்து கொடுக்கப்படும்.
ஒய்-201 ப்ரோ ஸ்மார்ட்போன், ஹுவெய் நிறுவனத்தின் ஒய்-201 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் இதன் முழு தொழில் நுட்ப விவரத்தினை கொஞ்சம் பொருத்திருந்திருந்து தான் பெற முடியும்.


Click it and Unblock the Notifications