Home
Mobile

ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ.. டூயல் 200MP கேமரா செட்டப் உடன் புதிய Huawei போன்.. எந்த மாடல்?

ஒன்றல்ல, இரண்டல்ல.. 10000mAh பேட்டரி உடன் மொத்தம் 3 வெவ்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கிடைத்த தகவலால் ஹானர் (Honor) நிறுவனத்தின் பெயர் - தலைப்பு செய்திகளான வேகத்தில்.. ஹூவாய் (Huawei) நிறுவனத்தின் பெயரும் இப்போது தலைப்பு செய்தியாகி உள்ளது.

ஒரு புதிய லீக் தகவலின்படி, சீன ஸ்மார்ட்போன் பிராண்டு ஆன ஹூவாய் நிறுவனமானது இரண்டு 200ம்பி கேமராக்கள் (Dual 200MP Camera) கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. அதாவது 200எம்பி + 200எம்பி என்கிற கேமரா செட்டப்பை கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.

டூயல் 200MP கேமரா செட்டப் உடன் புதிய Huawei போன்.. எந்த மாடல்?

இந்த கேமரா செட்டப் ஆனது ஸ்மார்ட்போன் வழியாக புகைப்படம் எடுப்பதற்கான புதிய தரத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லீக் - துல்லியமானதாக இருந்தால், இதுபோன்ற கேமரா செட்டப்பை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாகவும் இது இருக்கலாம். இது நாம் நினைப்பதை விட விரைவில் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் சீனாவில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வந்துள்ளது. அவருடைய கூற்றுப்படி டூயல் 200எம்பி கேமராக்கள் கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சோதனையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயரை டிப்ஸ்டர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை, மாறாக ஹூவாய் பிராண்டுடன் அடிக்கடி தொடர்புடைய ஒரு ஈமோஜியை சேர்த்துள்ளார்

அதன் மூலம் - டூயல் 200எம்பி கேமராக்களுடன் வருவது ஹூவாய் புரா 90 அல்ட்ரா (Huawei Pura 90 Ultra) ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது முன்னதாக அறிமுகமான ஹூவாய் புரா 80 அல்ட்ரா (Pura 80 Ultra) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்

நினைவூட்டும் வண்ணம் ஹூவாய் புரா 80 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூன் 2025 இல் 50எம்பி 1-இன்ச் ப்ரைமரி சென்சார் மற்றும் ஹுவாயின் சிக்னேச்சர் XMAGE செயலாக்கத்துடன் அறிமுகமானது. இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகமான "வலுவான கேமரா ஃபிளாக்ஷிப்" ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது

ஆனால் அடுத்ததாக வரும் ஹூவாய் புரா 90 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியை முற்றிலும் வேறொரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடும் என்பது போல் தெரிகிறது. சுவாரஸ்யமாக, மற்றொரு லீக் ஆனது, ஹூவாய் புரா 90 ப்ரோ பிளஸ் மற்றும் புரா 90 அல்ட்ரா ஆகிய இரண்டுமே டூயல் 200எம்பி கேமரா செட்டப் உடன் சோதிக்கப்படுகின்றன என்று கூறுகிறது

இப்போதைக்கு, உறுதிப்படுத்தப்பட்ட வெளியீட்டு தேதி எதுவும் இல்லை. பெரும்பாலும் இது 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வர வாய்ப்புள்ளது. உலகின் முதல் ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஹூவாய் நிறுவனத்திற்கு டூயல் 200எம்பி கேமரா போனை கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வது பெரிய சவாலாக இருக்காது.

இதே டிப்ஸ்டர் - டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாகவே ஹானரின் 10000mAh பேட்டரி ஆனது சீனாவில் சான்றிதழை பெற்றுள்ள தகவல் வெளிப்படுத்தப்பட்டது. ஆக இந்த புதிய பேட்டரியை கொண்ட ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து, ஹானர் நிறுவனமானது அதன் 10000mAh பேட்டரியை மொத்தம் 3 மிட்-ரேஞ்ச் போன்களில் பேக் செய்யலாம் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த மூன்று போன்களும் - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 மற்றும் டைமன்சிட்டி 8500 ஆகியவற்றால் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 உடனான ஹானர் போனின் பைனல் மார்க்கெட்டிங் பெயர் என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 உடனான ஸ்மார்ட்போன் ஹானர் 500 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டைமன்சிட்டி 8500 உடனான மாடலை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) இது ஹானர் பவர் 2 ஆக இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Testing Worlds First Smartphone With Dual 200MP Cameras Could be Huawei Pura 90 Ultra Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X