பிப்ரவரி 24: மடிக்கக்கூடிய 5ஜி ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய சந்தையில் ஹூவாய் ஸ்மார்ட்போன் குறைந்த அளவில் தான் விற்பனை செய்யப்படுகிறது, இருந்தபோதிலும் இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 24-ம் தேதி
சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு ஹூவாய் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் தான் மடிக்கக்கூடிய 5ஜி ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு போட்டியாக விரைவில் சாம்சங் நிறுவனமும் அதன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹூவாய்
குறிப்பாக கடந்த ஆண்டு மேட் எஃப், மேட் ஃபிளெக்ஸ், மேட் ஃபிளெக்சி மற்றும் மேட் ஃபோல்டி போன்ற பெயர்களுக்கு ஐரோப்பிய காப்புரிமையை பெற்றிருந்தது ஹூவாய் நிறுவனம்.

8-இன்ச்
இதற்குமுன்பு வெளியான தகவல்கள் என்னவென்றால் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸமார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச்
டிஸ்பிளேவும் மடிக்கப்பட்ட நிலையில் 5-இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

காப்புரிமை
மேலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு தான் வெளியான காப்புரிமை விவரங்களில் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நிலையில் சிறிய இடைவெளி கொண்டிருப்பது தெரியவந்தது.

பிப்ரவரி 24
மேலும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா வரும் பிப்ரவரி 24-ம் தேதி மதியம் 2மணிக்கு துவங்குகிறது, இதில் கண்டிப்பாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








