சூனா பானாவுக்கு போன்ல செய்வினை வெச்ச ஹுவாய் நிறுவனம்.!

Huawei, flexible 5G smartphone, 5G smartphone, flexible, telecome, smartphone,Technology, News, India, ஹூவாய், 5 ஜி மடிக்கும் போன், 5 ஜி போன், சூனாபானவுக்கு செய்வினை, ஹூவாய், ஸ்மார்ட்போன், டெலிகாம

|

தற்போது வரும் காலங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட் போன்களும் மாறி வருகின்றது. இதில் ஏராளமான தொழில் நுட்பங்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் மடிக்கும் வகையில் கணினி, லேப்டாப் உள்ளிட்டவை வெளியே வந்துள்ளன. ஆனால் தற்போது ஹூவாய் நிறுவனம் தனது மடிக்கும் போனை வெளியிடுகின்றது.

ஒரு வேளை இந்தியாவில் மடிக்கும் ஸ்மார்ட் போனை ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்தால், என்னவாகும் என்று நினைத்தால் தான் காமெடியே வருகின்றது.

சூனா பானாவுக்கு போன்ல செய்வினை வெச்ச ஹுவாய் நிறுவனம்.!

நம்ம ஊரில் ஏற்கனவே நிறைய சூனாபானாக்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவர்களிடம் இந்த ஸ்மார்ட் போன் கிடைத்தால், என்னவாகும் என்று நினைத்து பாருங்கள் கொஞ்சம். சிரிப்பையும் அடக்க முடியாமல் வரும். ஒருசிலர் இந்த போனை பயன்படுத்தும் போது பிச்சு பிதுங்கி பீஸ் வாங்கி கொண்டு நிற்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

முதலில் இந்த ஸ்மார்ட் போனையும் பிறகு, காமெடி கதையும் தொடரலாம் வாருங்களே.!

 ஹூவாயின் மடிக்கும் 5 ஜி போன்:

ஹூவாயின் மடிக்கும் 5 ஜி போன்:

ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை மடிக்கும் போன்கள்:

இதுவரை மடிக்கும் போன்கள்:

முன்னதாக ராயோல் நிறுவனம் பிலெக்ஸ்பை என்னும் பெயரில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

மடிக்கும் 5 ஜி ஸ்மார்ட் போன்:

மடிக்கும் 5 ஜி ஸ்மார்ட் போன்:

ஹூவாய் நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய பகுதிக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனே அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹுவாய்  மடிக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்:

ஹுவாய் மடிக்கும் 5ஜி ஸ்மார்ட் போன்:

ஐரோப்பியர்களுக்கு 5ஜி சேவைகள் அதிவேகமாக வழங்குவதில் ஐரோப்பியா தீவிரம் காட்டுவதாக தெரிகிறது என ஹூவாய் நுகர்வோர் வியாபாரக் குழு தலைவர் வால்டர் ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹூவாய் அதிகளவில் முதலீடு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோடிகளில் முதலீடு செய்த ஹூவாய்:

கோடிகளில் முதலீடு செய்த ஹூவாய்:

ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் மட்டும் சுமார் 1300 முதல் 1800 கோடி யூரோக்களை முதலீடு செய்யும் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக ஹூவாய் இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

 விற்பனைக்கு வருகின்றது:

விற்பனைக்கு வருகின்றது:

ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி சாதனம் எவ்வாறு அழைக்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என பேங் தெரிவித்திருக்கிறார்.

 சூனாபான  காமெடி:

சூனாபான காமெடி:

இந்தியாவில் மடிக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் 5 ஜி ஸ்மார்ட் போன் வந்தால், இந்த போனை எப்படி ஓப்பன் செய்து என்று தெரியாமல் நிறைய பேர் வடிவேலுவின் ஓலைபாய் கதையை போன்றும் நடக்கலாம். ஓலைபாய் போன்று இந்த போனை சுருட்டியும் மடித்துக் கொள்ள முடியும்.

கால் செய்ய முடியாமல் விழிப்பார்கள்:

கால் செய்ய முடியாமல் விழிப்பார்கள்:

ஒரு சிலர் இந்த போனை எவ்வாறு கால் செய்வது என்றும் தெரியாமல் விழிப்பார்கள். மேலும் சிலர் தனக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்காப்பு என்றும் கூட அவர்கள் நினைத்து கொள்ள வாய்ப்புண்டு.

எப்படியே இந்த போனை ஓப்பன் செய்தே இல்லை கால் செய்யும் போதே பிச்சு பிதுங்கி பீஸ் வாங்கி கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். பாவம் ஹூவாய் நிறுவனம் என்று தான் தோன்றுகின்றது.

Best Mobiles in India

English summary
Huawei says its flexible 5G smartphone could : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X