Subscribe to Gizbot

வேற லெவல்: 40எம்பி + 24எம்பி கேமரா அமைப்புடன் ஹூவாய் பி11.!

Written By:

கடந்த வாரம் (டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று) ஹூவாய் பி11 என பெயரிடப்பட்ட புதிய தலைமை சாதனம் சார்ந்த பணிகளில் ஹுவாய் நிறுவனம் பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, கூறப்படும் எதிர்வரும் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றதொரு பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் அறிவித்தது.

வேற லெவல்: 40எம்பி + 24எம்பி கேமரா அமைப்புடன் ஹூவாய் பி11.!

நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கருவியான பி11 ஆனது 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே வெளியாகுமென்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வண்ணம் பிரபல லீக்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட் பி11 ஆனது 2018 காலாண்டில் வெளியாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்டெல்லார் கேமரா

ஸ்டெல்லார் கேமரா

கூடுதலாக எதிர்வரும் தலைமை சாதனமான ஹூவாய் பி 11 ஆனது ஒரு ஸ்டெல்லார் கேமராவையும் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI experience) தொழில்நுட்பத்தை கொண்டுவருமெனவும் ரோலண்ட் குவாண்ட்ட் வெளிப்படுத்தியுள்ளார்.

'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்பிளே

'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்பிளே

எக்ஸ்டிஏ டெவலப்பர்கள் மூலம் கசிந்த அந்த தகவலானது, ஹூவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் தலைமை சாதனம் பற்றிய சில முக்கிய குறிப்புகளையும் வெளிப்படுத்தி இருந்தது. வெளியான ஸ்மார்ட்போனின் கட்டமைப்பு கோப்புகளில் ஒன்று 'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்பிளே' (RoundCornerDisplay) என்கிற வார்த்தையை குறிப்பிடுகிறது.

சாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனல்

சாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனல்

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்சலால் என்கிற தீர்மானம் கொண்ட 6.01 இன்ச் சாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனலைக் கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும் மற்ற கோப்புகளானது, இக்கருவி 2244 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்டிருப்பதாக கூறுகிறது.

ஹைசிலிகான் கிரின் 960 செயலி

ஹைசிலிகான் கிரின் 960 செயலி

அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி - ஹூவாய் எம்10, ஹூவாய் எம்10 ப்ரோ மற்றும் ஹானர் வியூ 10 போன்ற நிறுவனத்தின் தற்போதைய தலைமை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள - ஹைசிலிகான் கிரின் 960 செயலி மூலம் இயக்கப்படலாம்.

யூஎஸ்பி 3.1 போர்ட்

யூஎஸ்பி 3.1 போர்ட்

மேலும் இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8.0.1-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கொண்டு இயங்கலாம். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி 3.1 போர்ட் ஒன்றும் இடம்பெறலாம் மற்றும் அது நிறுவனத்தின் ஈஸி ப்ராஜெக்ஷனை ஆதரிக்கும்.

ஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ்

ஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ்

இறுதியாக, இந்த சாதனம் ஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ் வெளியாகியுள்ளதென்பதும், இத்துடன் இஎம்எல்-ஏஎல்00, இஎம்எல்-எல்09, இஎம்எல்-எல்29 மற்றும் இஎம்எல்-டி00 உள்ளிட்ட மேலும் நான்கு மாடல் எண்கள் கொண்ட கருவிகளுடன் சேர்த்து காணப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

40எம்பி கேமரா அமைப்பு

40எம்பி கேமரா அமைப்பு

இந்த முதன்மை சாதனமானது வருகிற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவின்படி சென்றால், ஹூவாய் பி11-ல் ஒரு மூன்று கேமரா அமைப்பு இடம்பெறும் அதாவது 40எம்பி லெயக்கா 5x கலப்பின ஜூம் கொண்ட மூன்று லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுவருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரு 24எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவையும் கொண்டுவரலாம்.

ஹூவாய் பி11

ஹூவாய் பி11

ஆக, வருங்கால பி தொடர் ஸ்மார்ட்போன்களில் இந்த அளவிலான கேமரா மேம்படுத்தல் நிகழ்த்தப்படும், இமேஜிங் அதிகார மையமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், ஹூவாய் பி11 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

"ப்ரோ" இரவு பயன்முறை

கூறப்படும் பி11 ஸ்மார்ட்போனில் "புதிய சென்சார் மற்றும் ஒளியியலின்" முழு நன்மைகளையும் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரத்யேக "ப்ரோ" இரவு பயன்முறை இடம்பெறும், இது "100 சதவிகிதம் அதிக ஒளி" யை கைப்பற்றும் திறன் கொண்டதென்று கூறப்படுகிறது.

ஆட்டோ ஃப்ரேமிங்

ஆட்டோ ஃப்ரேமிங்

பின்னர் ஒரு ப்ரோ ஏஐ கேமரா ஒன்றும் இடம்பெறுகிறது, இது தானியங்கி "காட்சி அங்கீகாரம்" மற்றும் "ஆட்டோ ஃப்ரேமிங்" போன்ற விடயங்களைச் செய்யக்கூடியது. இறுதியாக "நிகழும் ஒவ்வொரு நிமிடத்தையும் எளிமையான முறையில் கைப்பற்றுவதற்கு இது உதவும்" என்று சுவரொட்டியின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள்

எந்த சந்தர்ப்பத்திலும், ஹூவாய் நிறுவனம் அதன் பி11 ஸ்மார்ட்போனில் - மிகவும் வேகமாக வளரும் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கலாம் என்பதை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹானர் வி10 ஸ்மார்ட்போன் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் இயக்கருவியில் சில ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள் இடம்பெற்றுள்ளன.

வன்பொருள் மற்றும் மென்பொருள்

வன்பொருள் மற்றும் மென்பொருள்

இருந்தாலும் கூட, இத்தகைய ஒரு சிறிய தகவலை வைத்துக்கொண்டு நாம் எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் வந்துவிட முடியாது. கேமரா அம்சங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கருவியின் ​​வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளை பொறுத்தே இதன் மாபெரும் வெற்றி உறுதி செய்யப்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huawei's P11 Android flagship to launch in early 2018. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot