Home
Mobile

விரைவில் புதிய விண்டோஸ் போனை அறிமுகம் செய்யும் ஹுவெய்!

By Super

விரைவில் புதிய விண்டோஸ் போனை அறிமுகம் செய்யும் ஹுவெய்!
ஹுவெய் நிறுவனம் புதிய விண்டோஸ்-8 போனை வருகிற 25ம் தேதி அறிமுகம் செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.

ஸ்மார்ட்போன் சந்தையில் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்று தோன்றுகிறது. இதற்கு நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போனை உதாரணமாக கூறலாம்.

இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் இயங்குதளம் கொண்டு இயங்கும். இப்போது இந்த லுமியா-900 ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு சிறந்த போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் இந்த விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஈர்த்து வருகிறது என்று தாராலமாக கூறலாம். இப்போது ஹுவெய் நிறுவனம் கூட அடுத்ததாக ஒரு விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வழங்குவதாக தகவல்கள் கூறுகின்றன.

பல ஆண்டு காலமாக நவீன தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் நோக்கியா, சாம்சங், எச்டிசி போன்ற நிறுவனங்கள் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை வழங்க உள்ளன.

இனி இந்த விண்டோஸ்-8 ஸ்மார்ட்போன் போட்டியில் ஹுவெய் நிறுவனமும் இடம் பெறும் என்று தான் கூற வேண்டும். மேலும் ஹுவெய் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் கொஞ்சம் காத்திருந்து தான் தகவல்களை பெற வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X