புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் ஹுவெய்!

By Super
|

புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் ஹுவெய்!
வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்பகரமான செய்தி காத்திருக்கிறது. புதிய குவாட் கோர் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது ஹுவெய் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அசன்டு டி-1 கியூ என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் டயமண்டு சிரீஸ் ஸ்மார்ட்போனாகும். இதோடு ஓர் புதிய மீடியாபேட்-10 என்ற டேப்லட்டையும் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹுவெய் நிறுவனம். இந்த டேப்லட் 10 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகிறது.

புதிய தொழில் நுட்ப வசதியோடு மக்களை சந்திக்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டின் முழு விவரமும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் வெளியாகும். அதுவரை கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X