Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் 6.68 மி.மீ பாடியில் 7000mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படியான டிசைனில் ஹூவாய் புரா எக்ஸ் வியூ (HUAWEI Pura X View) வெளியாகி இருக்கிறது. 6.39 இன்ச் டிஸ்பிளே, 6.68 எம்எம் பாடியில் காம்பாக்ட் மாடலாக களமிறங்கி இருக்கிறது. இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்லலாம்.

ஹூவாய் புரா எக்ஸ் வியூ அம்சங்கள் (HUAWEI Pura X View Specifications): 6.39 இன்ச் (2232 x 1320 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஹூவாய் புரா எக்ஸ் வியூ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் 6.68 மி.மீ பாடியில் 7000mAh பேட்டரி.. மாடல்?

குன்லுன் கிளாஸ் (Kunlun Glass) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹார்மனிஓஎஸ் 7 (HarmonyOS 7) கொண்ட கிரின் 9030எஸ் (Kirin 9030S) சிப்செட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 200 எம்பி மெயின் கேமராவுடன் இந்த ஹூவாய் புரா எக்ஸ் வியூ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் கொடுத்துள்ளது. பெரிஸ்கோப் கேமராவுக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ஹூவாய் புரா எக்ஸ் வியூ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் வெறும் 6.68 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது.

யாரு சாமி அவன்.. வெறும் 6.68 மி.மீ பாடியில் 7000mAh பேட்டரி.. மாடல்?

மேலும், 201 கிராம் எடை மட்டுமே வருகிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இந்த ஹூவாய் புரா எக்ஸ் வியூ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 60 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது. விசி கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

இந்த ஹூவாய் புரா எக்ஸ் வியூ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.84,417 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.98,489 ஆகவும் இருககிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1,19,597ஆகவும் இருக்கிறது. இது சீன மார்கெட்டின் விலைகளாகும்.

வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி முதல் சீன மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், 6.39 இன்ச் டிஸ்பிளேவுடன் காம்பாக்ட் லுக் கொடுப்பதால், மற்ற மார்கெட்களிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. 6.68 எம்எம் தடிமனும் முக்கிய காரணமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HUAWEI Pura X View With 200MP Camera Launched Sale From September 9 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X