2 டிஸ்பிளே, 4 கேமரா.. Samsung-ஐ செஞ்சி விட்ட சீன கம்பெனி.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு Fold Phone-ஆ!
சாம்சங் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் அம்புட்டு போல்ட் மற்றும் பிளிப் போன்களையும் தூக்கி சாப்பிடும் படியான விலை மற்றும் அம்சங்களுடன்.. சீன நிறுவனமான ஹூவாய் ஒரு தரமான போல்டபிள் ஸ்மார்ட்போனை செய்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ஹூவாய் நிறுவனம் ஹூவாய் புரா எக்ஸ் (Huawei Pura X) என்கிற புதிய போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிளாம்ஷெல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன இது 2 டிஸ்பிளேக்கள், 4 கேமராக்கள், 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1320 x 2120 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 16:10 ரேஷியோ உடனான 6.3-இன்ச் இன்னர் OLED LTPO 2.0 டிஸ்பிளே
- 980 × 980 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடடன 3.5-இன்ச் LTPO 2.0 அவுட்டர் டிஸ்பிளே
- சிப்செட் விவரங்கள் வெளியிடப்படவில்லை
- ஹார்மோனி ஓஎஸ் 5.0.1
- ட்ரிபிள் அவுட்வார்ட் பேஸிங் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ கேமரா
- OIS உடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் 10.7 மெகாபிக்சல் சென்சார்
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IPX8 ரேட்டிங்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 4,720mAh பேட்டரி
என்ன விலை? ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.89,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.95,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது மூன் ஷேடோ கிரே, மேஜிக் நைட் பிளாக், ஸ்டைலிஷ் ரெட், ஸ்டைலிஷ் கிரீன் மற்றும் ஜீரோ ஒயிட் ஆகிய 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. சீனாவில் முன்பதிவு செய்ய கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் டெலிவரி மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளில் ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தகவல் இல்லை
ஹவாய் ப்யூரா எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வித்தியாசமான ட்ரை-கலர் பேக் கவர் டிசைன் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு அம்சத்துடன் வருகிறது. ஹவாய் ப்யூரா எக்ஸ் கலெக்டர் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,19,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் போல்டபிள் ஐபோன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆப்பிள் நிறுவனம் வருகிற 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இவ்விரு போல்டபிள் டிவைஸ்களுக்கான மாஸ் ப்ரொடெக்ஷனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக 2026 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோன் அறிமுகம் செய்யப்படலாம்.
வடிவமைப்பை பொறுத்தவரை ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபோன் ஆனது சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் சீரீஸை போன்ற ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பை கொண்டிருக்கலாம் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபோனின் மெயின் டிஸ்பிளேவானது 7.9 முதல் 8.3 இன்ச் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் இருக்கும் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் ஐபேட் ஆனது மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது விரிக்கப்படும் போது 19-இன்ச் வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








