Huawei Pura X.. இப்படி ஒரு Foldable Phone-க்கு தானே இந்தியர்கள் தவம் கிடக்குறாங்க!
ஹூவாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் புரா எக்ஸ் (Huawei Pura X Foldable Smartphone) சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. 2 டிஸ்பிளேக்கள், 4 கேமராக்கள், 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது?
ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.89,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.95,000 க்கும் வாங்க கிடைக்கிறது.

இது மூன் ஷேடோ கிரே, மேஜிக் நைட் பிளாக், ஸ்டைலிஷ் ரெட், ஸ்டைலிஷ் கிரீன் மற்றும் ஜீரோ ஒயிட் ஆகிய 4 கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளில் ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து தகவல் இல்லை.
ஹவாய் ப்யூரா எக்ஸ் ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து ஹவாய் ப்யூரா எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வித்தியாசமான ட்ரை-கலர் பேக் கவர் டிசைன் மற்றும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சத்துடன் வருகிறது. இந்த கலெக்டர் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.1,19,000 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1320 x 2120 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 16:10 ரேஷியோ உடனான 6.3-இன்ச் இன்னர் OLED LTPO 2.0 டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் 980 × 980 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடடன 3.5-இன்ச் LTPO 2.0 அவுட்டர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
ஹார்மோனி ஓஎஸ் 5.0.1 உடன் வரும் ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் அவுட்வார்ட் பேஸிங் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ கேமரா + OIS உடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. இன்னர் ஸ்க்ரீனில் 10.7 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IPX8 ரேட்டிங் உடன் வருகிறது.கூடவே இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 4,720mAh பேட்டரியை கொண்டுள்ளது
இதற்கு போட்டியாக மோட்டோரோலா நிறுவனமும் அதன் ரேஸர் 60 அல்ட்ரா (Motorola Razr 60 Ultra) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரேஸர் பிளஸ் 2025 (Razr Plus 2025) என்றும் அழைக்கப்படுகிறது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @evleaks வெளியிட்டுள்ள சமீபத்திய ரெண்டர் வீடியோவிபடி - மோட்டோரோலா ரேஸர் 60 அல்ட்ரா ஆனது மரத்தால் என பேக் பேனலை பெறலாம்.
வெளியான ரெண்டர் வீடியோ ஆனது ஒரு தனித்துவமான வுட் டெக்ஷர்-ஐ காட்டுகிறது. இருந்தாலும் கூட குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது உண்மையான மரத்தால் ஆனதா அல்லது மரம் போன்ற உயர்தர சாயலா என்பது தெளிவாக தெரியவில்லை. வீடியோவில் காணப்படும் பளபளப்பான பினிஷ் - அது உண்மையான மரமாக இருக்காது என்பதை குறிக்கிறது. இருந்தாலும் இப்போதைக்கு எதையும் உறுதியாக கூற முடியாது.


Click it and Unblock the Notifications








