ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. OLED டிஸ்பிளே.. DUAL டெலிபோட்டோ.. 100W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி அல்ட்ரா லார்ஜ் டூயல் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் டூயல் ஆப்டிகல் போகல் லென்த்ஸ் கொண்ட மாடலாக ஹூவாய் புரா 80 அல்ட்ரா (HUAWEI Pura 80 Ultra) களமிறங்கி இருக்கிறது. ஒன்-இன்ச் அல்ட்ரா-ஹை டைனாமிக் மெயின் கேமரா, 40 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா போன்ற மற்ற பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. இந்த ஹூவாய் புரா 80 அல்ட்ரா போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ஹூவாய் புரா 80 அல்ட்ரா அம்சங்கள் (HUAWEI Pura 80 Ultra Specifications): இந்த ஹூவாய் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (ஒன்-இன்ச்) வருகிறது. சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.

12.5 எம்பி பாட்டம் டெலிபோட்டோ லென்ஸ் கிடைக்கிறது. மேலும், 40 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. டூயல் டெலிபோட்டோ லென்ஸ் கிடைப்பதால், 3.7X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 9.4X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. இதுபோக 100X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். ஆட்டோபோகஸ், 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
ஏஐ அல்ட்ரா கிளியர் என்ஹான்ஸ்மெண்ட் ஏஐ போட்டோகிராபி மாஸ்டர், ஏஐ டைனாமிக் போட்டோ போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ஹூவாய் புரா 80 அல்ட்ரா போனில் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

6.8 இன்ச் (2848 x 1276 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எல்டிபிஓ (LTPO) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1440Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், P3 வைடு கலர் காமட் சப்போர்ட் கிடைக்கிறது.
குன்லுன் கிளாஸ் (Kunlun Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த ஹூவாய் புரா 80 அல்ட்ரா போனில் ஹர்மோனிஓஎஸ் 5.1 (HarmonyOS 5.1) கிடைக்கிறது. பேக்கப் சிஸ்டம் மிரளவிடுகிறது. ஆகவே, 5700mAh பேட்டரி மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 80W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், ஹூவாய் ஹைஸ்டன் ஆடியோ, டைப்-சி ஆடியோ போர்ட் கிடைக்கிறது. ஐஆர் சென்சார், கிராவிட்டி சென்சார், லேசர் ஆட்டோ போகஸ் போன்ற பிரீமியம் சென்சார்கள் கிடைக்கின்றன. சீனாவில் சாட்டிலைட் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. கோல்டு (Gold) மற்றும் பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த ஹூவாய் புரா 80 அல்ட்ரா போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,18,738ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.1,30,613ஆகவும் இருக்கிறது. இந்த விலை சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டதால், இதில் மாற்றங்கள் இருக்கலாம். சீனாவில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








