3ஜி ரேடியோ வசதியுடன் ஹுவெய் ப்ரிஸம் ஸ்மார்ட்போன்!

பயன்படு்த்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் முழு தொடுதிரை வசதியும் வழங்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றி சரிவர அதிக தகவல்கள் ஏதும் வெளியாவில்லை. ப்ரிஸம் ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எந்த ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதில்
ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது.
அப்பொழுது ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் நிச்சயம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஓர் புதிய அம்சம் என்னவென்றால் 3ஜி ரேடியோ வசதியை கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. இது போன்ற தொழில் நுட்பத்திற்கு இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரி பெரிதும் துணை புரியும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஹுவெய் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. இதன் முழு விவரமும் வெளியாகும் வரை வாடிக்கையாளர்களின் காத்திருப்பும் மிக அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications