டைமெண்ட் சிரீஸ் மொபைல்களை வழங்க ஹுவெய் திட்டம்!

Posted By: Staff
டைமெண்ட் சிரீஸ் மொபைல்களை வழங்க ஹுவெய் திட்டம்!
வாடிக்கையாளர்களை பெரும் அளவில் திருப்திபடுத்த, தொழில் நுட்பங்களில் அதிகம் கவனம் செலுத்த வருகிறது ஹுவெய் நிறுவனம்.  ஹுவெய் நிறுவனம் டைமெண்ட் சிரீஸ் மொபைல்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. அதற்காக புதிய டையமண்ட் சிரீஸ் மொபைல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.

வருகிற மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் ஆயிரக்கணக்கான புதிய மொபைல்கள் அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் நடக்க இருக்கும் இந்த மொபைல் திருவிழாவில் புதிதாக பட்டியலில் சேர வரும் டயமண்ட் சிரீஸ் மொபைல்,

மொபைல் சந்தையை கலக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

4.3 இஞ்ச் அமோல்டு திரை வசதி இதில் கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஓஎஸ் வசதி கொண்டதாக இருந்தால், நிச்சயம் 1.5 ஜெகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் கொண்டதாக இருக்கும். இதில் பிஎஸ்ஐ 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவையும் வழங்கும் என்று கருதப்படுகிறது.

ஹுவெய் நிறுவனத்தின் சிறந்த படைப்பான அசன்டு பி-1 ஸ்மார்ட்போனை விட கூடுதல் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக தான் இந்த டையமன்ட் சிரீஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் என்ன வசதி வழங்கப்பட உள்ளது என்பது மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் தெரிந்துவரும். ஆனால் அதற்கு பிப்ரவரி 26 வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்